பொது செய்தி

தமிழ்நாடு

'ஊழல் இல்லாத ஆட்சி: ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்க வேண்டும்'

Added : டிச 21, 2020
Share
Advertisement
இடைப்பாடி: ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றக்கோரி, ஆம் ஆத்மி கட்சியின், மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், தமிழகம் முழுதும், துடைப்பம் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அந்த யாத்திரையின் ஒரு பகுதியாக, இடைப்பாடியில், நேற்று பிரசார கூட்டம் நடந்தது. அதில், வசீகரன் பேசியதாவது: கடந்த, 13ல் யாத்திரையை தொடங்கும்போது, ஊரடங்கு இருப்பதாக கூறி, சென்னையில் கைது செய்தனர். முதல்வர் பழனிசாமி,

இடைப்பாடி: ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றக்கோரி, ஆம் ஆத்மி கட்சியின், மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், தமிழகம் முழுதும், துடைப்பம் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அந்த யாத்திரையின் ஒரு பகுதியாக, இடைப்பாடியில், நேற்று பிரசார கூட்டம் நடந்தது. அதில், வசீகரன் பேசியதாவது: கடந்த, 13ல் யாத்திரையை தொடங்கும்போது, ஊரடங்கு இருப்பதாக கூறி, சென்னையில் கைது செய்தனர். முதல்வர் பழனிசாமி, இத்தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். நாங்கள் பிரசாரம் செய்ய, கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். முதல்வர், யாரிடம் அனுமதி கேட்டார்? அவரை, கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் சாலை போட விடப்படும் ஒப்பந்தங்களில், 60 சதவீத பணி மட்டும் செய்து விட்டு, மீதியை கொள்ளையடிக்கின்றனர். அதனால், 2021ல் ஊழல் இல்லாத ஆட்சி அமைக்க, ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X