சேலம்: மனம் மன்ற, 45ம் ஆண்டு விழாவையொட்டி, சேலம், சண்முகா மருத்துவமனை கூட்ட அரங்கில், மூன்றாம் நாள் விழா, நேற்று நடந்தது. தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அதில், பாலச்சந்தரின், காயம் ஆற்றும் கணைகள், சரவணக்குமாரின், நீர்க்கோட்டுச் சித்திரங்கள் ஆகிய கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து, 'இலக்கியமும் நகைச்சுவையும்' தலைப்பில், பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தம் பேசியதாவது: மனம் மன்றம், மனிதர்களை நல்வழிப்படுத்தும் செயல்களை மேற்கொள்கின்றன. மனிதனுக்கு, காலம் உயிர் போன்றது. எதை வேண்டுமானாலும் இழந்தால் பெற்றுக்கொள்ளலாம். இழந்த காலத்தை பெற முடியாது. நகைச்சுவையால் மட்டும், ஒருவரை சந்தோஷப்படுத்த முடியும். அதை கேட்பவர் ஒத்துழைத்தால் மட்டும், சொல்பவரால், தொடர்ந்து புது நகைச்சுவை உருவாக்க முடியும். நல்ல நகைச்சுவை, ரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்துவதால் தான் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என, முன்னோர் கூறினர். வெடிகுண்டு கூட ஒருமுறை தான் வெடிக்கும். ஆனால், நல்ல புத்தகங்களை திறக்கும் போதெல்லாம் வெடிக்கும். நகைச்சுவை, சாதாரண வாழ்க்கை சம்பவங்கள் என்றில்லாமல், இலக்கியங்களிலும் முக்கிய பங்கு வகித்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE