பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வரை சந்திக்க போலீஸ் மறுப்பு; அ.தி.மு.க., பெண் பிரமுகர் ரகளை

Added : டிச 21, 2020
Share
Advertisement
ஓமலூர்: விமான நிலையத்தில், முதல்வரை சந்திக்க, போலீஸ் மறுத்ததாக கூறி, அ.தி.மு.க., பெண் பிரமுகர் ரகளையில் ஈடுபட்டார்.முதல்வர் பழனிசாமி, சேலம் விமான நிலையத்தில் இருந்து, நேற்று காலை சென்னை சென்றார். முன்னதாக, விமான நிலையத்தில் ஒரு பெண், அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தல் நோட்டீ ஸை வைத்துக்கொண்டு, முதல்வரை சந்திக்க போலீசார் மறுத்ததாக கூச்சலிட்டார். இதனால், முதல்வரை வழியனுப்பிய,

ஓமலூர்: விமான நிலையத்தில், முதல்வரை சந்திக்க, போலீஸ் மறுத்ததாக கூறி, அ.தி.மு.க., பெண் பிரமுகர் ரகளையில் ஈடுபட்டார்.


முதல்வர் பழனிசாமி, சேலம் விமான நிலையத்தில் இருந்து, நேற்று காலை சென்னை சென்றார். முன்னதாக, விமான நிலையத்தில் ஒரு பெண், அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தல் நோட்டீ ஸை வைத்துக்கொண்டு, முதல்வரை சந்திக்க போலீசார் மறுத்ததாக கூச்சலிட்டார். இதனால், முதல்வரை வழியனுப்பிய, அ.தி.மு.க.,வினர் அதிருப்தியடைந்தனர். விசாரணையில், அப்பெண் திருவள்ளூர் மாவட்டம், புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த லட்சுமி என்பதும், உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட தேர்வு செய்யப்பட்டு, பின் வாய்ப்பு வழங்காமல் கட்சியினரால் ஓரங்கட்டப்பட்டதும் தெரிந்தது. இதுகுறித்து, கட்சிக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், முதல்வரை சந்தித்து புகார் தெரிவிக்க வந்ததாக, அப்பெண் கூறினார். ஆனால், கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டதால், பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், அவரை விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அறிவுறுத்தினர். கட்சியினர், உங்கள் மாவட்டத்தை விட்டு, இங்கு வந்து ஏன் ரகளை செய்கிறீர் என, கேள்வி எழுப்பினர். இதையடுத்து, காரை எடுத்துக்கொண்டு, அப்பெண் புறப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X