சங்ககிரி: சங்ககிரி, தேவூர், மைலம்பட்டியை சேர்ந்த, தறித்தொழிலாளி பழனியப்பன் மனைவி வளர்மதி, 45. இவர், தேவூர் போலீஸ் ஸ்டேஷனில், நேற்று அளித்த புகார் மனு: கணவர், தொழில் சம்பந்தமாக சேலம் சென்றார். நானும், என் மகள் வித்யாவும், டிச., 19 காலை, 11:00 மணிக்கு, அதே பகுதியில் வசிக்கும், கணவரின் அண்ணன் ராமசாமி வீட்டுக்கு செல்ல வேண்டி, வீட்டையும், கேட்டையும் பூட்டிவிட்டு சென்றேன். மதியம், 2:00 மணிக்கு, வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டதோடு, பீரோவையும் உடைத்து, அதில் இருந்த, 1 லட்சம் ரூபாய், 5 பவுன் நகைகளை, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றது தெரிந்தது. கொள்ளையர்களை கண்டுபிடித்து, பணம், நகைகளை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE