தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் சிறந்த நூலகர் விருது, வாசகர் வட்ட விருதுகளை, அமைச்சர் அன்பழகன் வழங்கினார்.
தமிழகத்தில், நூலகர்களை ஊக்குவிக்கும் வகையில், 2001 முதல் ஆண்டுதோறும், நூலகர் வார விழாவில், நல்நூலகர் விருது வழங்கப்பட்டு வந்தது. அந்த விருது, 2012 முதல் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இந்திய நூலக தந்தை என போற்றப்படும் டாக்டர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் பெயரில் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் அரசு பொது நூலகங்களில் சிறப்பாக சேவையாற்றியதற்காக விருதுக்கு, 33 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நவ., 24ல் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி, ஐந்து நூலகருக்கு விருதுகளை வழங்கினார். கொரோனா தடுப்பால் மற்றவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், மாவட்ட மைய நூலகர் ஆதிரை, சிறந்த வாசகர் வட்ட விருதுக்கு, மைய நூலக வாசகர் வட்டம் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், துரிஞ்சிப்பட்டியில் நடந்த அரசு விழாவில், மாவட்ட கலெக்டர் கார்த்திகா முன்னிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், நூலகர் ஆதிரை, வாசகர் வட்டத்தலைவர் ராஜசேகரன், துணைத்தலைவர் லட்சுமிகாந்தன் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE