பொது செய்தி

தமிழ்நாடு

'விவசாயிகளுக்கு தி.மு.க., துரோகம்'

Added : டிச 21, 2020
Share
Advertisement
தர்மபுரி: ''விவசாயிகளுக்கு, தி.மு.க., துரோகம் செய்கிறது,'' என, பா.ஜ., மாநில செயலாளர் ராகவன் கூறினார். தர்மபுரியில் நடந்த, பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின், வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் நலனுக்காகத்தான். மத்தியில், காங்., ஆட்சியில் இருந்தபோதே, இத்திட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தர்மபுரி: ''விவசாயிகளுக்கு, தி.மு.க., துரோகம் செய்கிறது,'' என, பா.ஜ., மாநில செயலாளர் ராகவன் கூறினார். தர்மபுரியில் நடந்த, பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின், வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் நலனுக்காகத்தான். மத்தியில், காங்., ஆட்சியில் இருந்தபோதே, இத்திட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதைத்தான் தற்போதைய, பா.ஜ., அரசு சட்டமாக்கி உள்ளது. கடந்த, 2016 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., ஆட்சி அமைந்தால், இடைத்தரகர்கள் இல்லாமல், தமிழக விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, அப்போது கூறியது. அதைத்தான், பா.ஜ., அரசு சட்டமாக்கி உள்ளது. ஏற்கெனவே, தமிழக மக்களுக்கு பல்வேறு துரோகங்களை செய்த, தி.மு.க., தற்போது விவசாயிகளுக்கும் துரோகம் செய்கிறது. அ.தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளரை அவர்கள் அறிவித்துள்ளனர். சட்டசபை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, பா.ஜ., தலைமை முடிவு செய்யும். தற்போது வரை நாங்கள், அ.தி.மு.க., கூட்டணியில் தான் உள்?ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X