சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசிடம் உயரதிகாரி போல் பேசி மிரட்டிய வாலிபர் கைது

Added : டிச 21, 2020
Share
Advertisement
பென்னாகரம்: பென்னாகரம், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், ஏட்டாக பணியாற்றுபவர் கலையரசி, 41; இவர், நேற்று முன்தினம், பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு, டிப்டாப் உடையுடன் வந்த ஒரு வாலிபர், மேடம் உங்களுக்கு, ஏ.டி.எஸ்.பி., ராதிகா சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், உங்களை அழைத்து வருமாறும் கூறினார், என தெரிவித்தார். சந்தேகமடைந்த கலையரசி, அந்த வாலிபரை

பென்னாகரம்: பென்னாகரம், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், ஏட்டாக பணியாற்றுபவர் கலையரசி, 41; இவர், நேற்று முன்தினம், பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு, டிப்டாப் உடையுடன் வந்த ஒரு வாலிபர், மேடம் உங்களுக்கு, ஏ.டி.எஸ்.பி., ராதிகா சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், உங்களை அழைத்து வருமாறும் கூறினார், என தெரிவித்தார். சந்தேகமடைந்த கலையரசி, அந்த வாலிபரை பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அந்த வாலிபர் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை சங்கர் நகரை சேர்ந்த பெரியசாமி, 29, என தெரிந்தது. அவர், கடந்த மாதம், 22ல் ஏட்டு கலையரசிக்கு போன் செய்து, தான் ஏ.டி.எஸ்.பி., ராதிகா பேசுகிறேன் என, பெண் குரலில் பேசியதும், தன் உருவத்தை மறைத்துக்கொண்டு வீடியோ காலில், 'சல்யூட் அடி, லெப்ட் ரைட் போடு' என கூறியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பெரியசாமியை பென்னாகரம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X