மொடக்குறிச்சி: காலைக்கதிர் நாளிதழ், பிறந்தநாள் விழாவை, அட்டவனை அனுமன்பள்ளியில், வாசகர்கள் கொண்டாடினர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி யூனியன், அட்டவனை அனுமன் பள்ளி பஞ்., ஓம் சக்தி நகரில், சமூக நல ஆர்வலர்கள் கூட்டியக்கம், மக்கள் மற்றும் வாசகர்கள் சார்பில், காலைக்கதிர் நாளிதழின், பிறந்தநாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. சமூக நல ஆர்வலர்கள் கூட்டியக்க மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற தாசில்தார் மாணிக்கவேல், கேக் வெட்டி நிகழ்வை தொடங்கி வைத்தார். பிளக்ஸ் பேனர் வைத்து கொண்டாடிய வாசகர்கள், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கேக், லட்டு வழங்கினர்.
விழா குறித்து விஜய் ஆனந்த், செந்தில்வேல், சீனிவாசன், அழகேசன், ரத்தினவேல் கூறியதாவது: மக்களின் காவலனாக காலைக்கதிர் நாளிதழ் உருவெடுத்து, வெற்றி நடைபோட்டு வருகிறது. கடந்த, 1999, டிச.,17ல் தொடங்கப்பட்டு, 22வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. உண்மையை உரக்க சொல்வதுடன், அரசு ஊழியர், அரசியல்வாதிகளின் ஊழல்களை, ஆதாரத்துடன் தோலுரித்து காட்டும் நாளிதழாக, தேர்தல் நேரத்தில் தேர்தல் களம் மூலம், வார்த்தைகளால் விளையாடி, மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று திகழ்கிறது. காலைக்கதிர் நாளிதழால், கிராம பகுதிகளில் பல முதியோர், விதவை பெண்களுக்கு உதவித்தொகை கிடைத்துள்ளது. குடிநீர் பிரச்னை, சாலை வசதி, தெரு விளக்கு பிரச்னை, சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு, தீர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE