கொடுமுடி: கோவில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுக்க வந்த, பக்தர்கள் இருவர், கொடுமுடியில் காவிரி ஆற்றில் மூழ்கி பலியானது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில், மகுடேஸ்வரர் கோவில் அருகில், காவிரி ஆறு செல்கிறது. இதனால் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், மக்கள், தங்கள் பகுதியில் நடக்கும் திருவிழாக்களுக்கு, காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுக்க வருகின்றனர். கரூர், தென்னிலை அருகே, காமாட்சிபுரம் மதுரைவீரன் கோவில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுக்க, இரண்டு பெண்கள் உள்பட, 12 பேர், டூவீலரில் நேற்று காலை, 9:45 மணிக்கு கொடுமுடி வந்தனர். முன்னதாக மணல்மேடு பகுதியில், காவிரி ஆற்றில் அனைவரும் குளித்தனர். அப்போது கேசவரிதன், 17, ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். நீச்சல் தெரியாததால், அவரை காப்பாற்ற ராஜ்குமார், 30, முயன்றார். ஆனால், இருவரும் ஆற்றில் மூழ்கி பலியாகினர். மற்ற பக்தர்கள் அதிர்ச்சியடைந்து கூக்குரல் எழுப்பினர். கொடுமுடி தீயணைப்பு நிலைய அலுவலர் சிவராஜ் தலைமையிலான வீரர்கள், இருவரது உடலையும் மீட்டனர். இதுகுறித்து கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர். பலியான கேசவரிதன், பிளஸ் ? மாணவன், ராஜ்குமார் கூலி தொழிலாளி என்றும், போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE