சேலம்: அரசு ஐ.டி.ஐ., மாணவர்கள், பழைய பஸ் பாஸை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழக, மேலாண் இயக்குனர் இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கை: கல்லூரிகள் கடந்த, 7 முதல் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலைய, முதலாம், இரண்டாமாண்டு மாணவர்களுக்கு, நடப்பாண்டு புது இலவச பயண அட்டை அச்சடித்து வழங்குதலில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், மாநகர போக்குவரத்து பஸ்களில், இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது. கல்லூரிகளில் முதலாமாண்டு வழங்கிய அடையாள அட்டையை, 2020-21க்கு பயன்படுத்தியும், இரண்டாமாண்டு மாணவர், 2019 - 20ம் ஆண்டு பெற்ற பயண அட்டையை பயன்படுத்தியும், இலவசமாக பயணிக்க, டிச., 31 வரை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்த, பிற கோட்ட மேலாண்மை இயக்குனர்களும் உத்தரவிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE