ஓமலூர்: முதல்கட்ட பிரசாரத்தை முடித்துவிட்டு, முதல்வர் சென்னை புறப்பட்டார். சேலம், கரூர் மாவட்டங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கடந்த, 16ல், முதல்வர் பழனிசாமி சேலம் வந்தார். கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக்கு பின், நங்கவள்ளி, பெரியசோரகையில், பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த முதல்வர், தேர்தல் பிரசாரத்தை தொடங்கி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்புடன், 2,500 ரூபாய் வழங்கப்படும் என, அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து, பல்வேறு விழாக்களில் பங்கேற்ற அவர், நேற்று காலை, விமானம் மூலம், சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அவரை, எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி வேல், செம்மலை உள்ளிட்ட கட்சியினர், வருவாய்த்துறையினர் வழியனுப்பி வைத்தனர்.
பனி மூட்டத்தால் தாமதம்: சென்னையிருந்து புறப்படும் விமானம், வழக்கமாக காலை, 8:20 மணிக்கு சேலம் வந்தடையும். நேற்று, சேலம் விமான நிலையத்தை சுற்றி, கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால், விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள், சென்னையிலிருந்து, சேலத்துக்கு புறப்பட அனுமதி வழங்கவில்லை. பனிமூட்டம் விலகிய பின், 9:40 மணிக்கு விமானம் வந்தது. பின், 10:10 மணிக்கு சென்னை புறப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE