காஞ்சிபுரம்: யாருடன் கூட்டணி என்பதை ஜனவரியில் அறிவிக்கப்படும் எனக்கூறிய மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், தங்களை ‛பி' டீம் என சொல்வது அவமானப்படுத்துவதாக உள்ளதாக கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது: தமிழகத்தை சீரமைப்போம் என்ற கொள்கையில் 7 அம்ச திட்டங்கள் உள்ளன. அதில், மக்களுக்கு சென்றடைய வேண்டிய அரசு சேவைகள் எல்லாம் மக்களின் உரிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக ‛நேர்யைான துரித நிர்வாகம்' என்னும் திட்டம் இருக்கிறது. அடுத்ததாக, இல்லத்தரசிகளுக்கு ஊதியம், வறுமைக் கோடு இல்லாமல் செழுமைக் கோடு, சிறு தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம், இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றுவதும் அடங்கும்.

வரும் சட்டசபை தேர்தலில் நாங்கள் அதிமுக, திமுக., கட்சிகளுடன் கூட்டணி இல்லை என உறுதியாக சொல்லலாம். ரஜினியுடன் கூட்டணி சேர்ந்தால் யார் முதல்வர் வேட்பாளர் என நாங்கள் பேசி முடிவு செய்வோம். நான் நாத்திகன் அல்ல, பகுத்தறிவாளன். அதன் அடுத்தக்கட்டம் தான் நடுநிலை என்பது. நாங்கள் மக்களை மட்டுமே நம்பியுள்ளோம். தமிழகத்தை ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை உயர்த்துவதே எங்கள் கனவு.

யாருடன் கூட்டணி என்பதை இப்போது சொல்ல மாட்டேன். ‛பி' டீம் என சொல்வது எங்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது. கூட்டணி குறித்து ஜனவரியில் அறிக்கை வெளியிடுவேன். தமிழகத்தின் அனைத்து ஊர்களும் எனது சொந்த ஊர் தான். தற்போது ஒவ்வொரு தமிழனின் தலையிலும் ரூ.60 ஆயிரம் வரையில் கடன் சுமை உள்ளது. எங்களுடன் எதிர் மாற்றுக்கருத்து உள்ளவர்கள் எங்கள் எதிரிகள் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE