குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, புதிதாக திறக்கப்பட்ட பூங்காவில் பொதுமக்கள் திரண்டனர். குமாரபாளையம் அருகே, சேலம்-கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு குமாரபாளையம் நுழைவு பகுதியில், பெரிய பள்ளத்தில் குப்பை கொட்டப்பட்டு வந்தது. துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, குடியிருப்பு வாசிகள் பாதிப்புக்கு உள்ளாகினர். குமாரபாளையம் நுழைவு பகுதி முகம் சுளிக்கும் விதத்தில் உள்ளதாகவும், குப்பையை அகற்றி பூங்கா அமைக்க வேண்டும் என, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, இங்கு பூங்கா அமைக்கும் பணி தொடங்கியது. அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, கடந்த, 12ல் மின்துறை அமைச்சர் தங்கமணி பூங்காவை திறந்து வைத்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால், தட்டான்குட்டை, குளத்துக்காடு, வாசவி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். சிறுவர், சிறுமியர் அங்குள்ள ஊஞ்சல்களில் ஆடியும், சறுக்கு பலகைகளில் விளையாடியும் மகிழ்ந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE