கரூர்: கரூர் மாவட்டத்தில், சில நாட்களாக, கடும் பனி உள்ளதால், கோரைப்புல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நெரூர், செவிந்திப்பாளையம், ஒத்தக்கடை, பஞ்சாமாதேவி, கடம்பங்குறிச்சி, அரங்கநாதன் பேட்டை உள்ளிட்ட காவிரியாற்று பகுதிகளில், கோரைப்புல் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம், பாய்கள், வீட்டு அலங்கார பொருட்கள், கூடைகள், இருக்கைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், சில நாட்களாக கடும் பனியாக உள்ளது. இதனால், கோரைப்புல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. கோரைப்புல்லை அறுவடை செய்து, காயவைத்துதான், பாய் உற்பத்தி உள்ளிட்ட அலங்கார பொருட்களை செய்ய முடியும். கடும் பனி, சாரல் மழை, வானம் மேக மூட்டமாக இருப்பதால், கோரைப்புல்லை காய வைக்க முடியவில்லை என, விவசாயிகள் புலம்புகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE