பொது செய்தி

தமிழ்நாடு

வெங்காயம் இறக்குமதிக்கான காலக்கெடு நீட்டிப்பால் விவசாயிகள் அதிருப்தி

Added : டிச 21, 2020
Share
Advertisement
கரூர்: வெளிநாடுகளில் இருந்து, பெரிய வெங்காயம் இறக்குமதிக்கு, அறிவிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதனால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.நாட்டில் கொரோனா பரவல், அதிகளவில் இருந்து போது, பெரிய வெங்காயம் விலை அதிகமாக இருந்தது. கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டிருந்த,

கரூர்: வெளிநாடுகளில் இருந்து, பெரிய வெங்காயம் இறக்குமதிக்கு, அறிவிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதனால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.


நாட்டில் கொரோனா பரவல், அதிகளவில் இருந்து போது, பெரிய வெங்காயம் விலை அதிகமாக இருந்தது. கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டிருந்த, லட்சக்கணக்கான ஏக்கர் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் வரத்து குறைந்து, பெரிய வெங்காயம் ஒரு கிலோ, 120 ரூபாய், சின்ன வெங்காயம் ஒரு கிலோ, 100 ரூபாய் வரை இருந்தது. இதனால், தமிழக அரசு பண்ணை பசுமை அங்காடிகளில், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை, 45 ரூபாய்க்கு விற்பனை செய்தது. உள்நாட்டில் வரத்து குறைந்த நிலையில், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து, 30 ஆயிரம் டன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால், வெங்காயம் விலை படிப்படியாக குறைந்தது. இந்நிலையில், உள்ளூரில் இருந்து வெங்காயம் வரத்து, துவங்கியுள்ள நிலையில் தற்போது, ஒரு கிலோ பெரிய வெங்காயம், 45 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை விற்கிறது. ஆனால் இறக்குமதிக்கான தேதியை, மத்திய அரசு நீட்டித்துள்ளதால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கடந்த மூன்று மாதங்களாக, பெரிய வெங்காயம் வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது வெங்காயம் அறுவடை துவங்கி, சந்தைக்கு வர துவங்கியுள்ளதால், விலை குறைந்து வருகிறது. இறக்குமதி உத்தரவை, மத்திய அரசு வாபஸ் பெறும் என நினைத்தோம். ஆனால், இறக்குமதிக்கான காலக்கெடுவை ஜன., 31 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதனால், உள்ளூர் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். விலை குறைந்து வரும் நிலையில், இறக்குமதி உத்தரவுக்கான காலக்கெடு நீட்டிப்பை, மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X