பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தலில் மகன் போட்டியில்லை: அமைச்சர் தங்கமணி உறுதி

Added : டிச 21, 2020
Share
Advertisement
பள்ளிபாளையம்: ''தலைமை வாய்ப்பு கொடுத்தால், மீண்டும் போட்டியிடுவேன். என் மகனோ, என் குடும்பத்தாரோ அரசியலுக்கு வர மாட்டார்கள்,'' என, பள்ளிபாளையத்தில் நடந்த கட்சி விழாவில், அமைச்சர் தங்கமணி பேசினார்.அ.தி.மு.க., சார்பில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம், ஒன்றிய செயலாளர் செந்தில்

பள்ளிபாளையம்: ''தலைமை வாய்ப்பு கொடுத்தால், மீண்டும் போட்டியிடுவேன். என் மகனோ, என் குடும்பத்தாரோ அரசியலுக்கு வர மாட்டார்கள்,'' என, பள்ளிபாளையத்தில் நடந்த கட்சி விழாவில், அமைச்சர் தங்கமணி பேசினார்.
அ.தி.மு.க., சார்பில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம், ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமையில் நடந்தது. இதில், அமைச்சர் தங்கமணி பேசியதாவது: தொடர்ந்து, 10 ஆண்டுகள் ஒரு கட்சி, ஆட்சியில் இருந்தால் பொதுவாக மக்களுக்கு வெறுப்புணர்வும், பல விமர்சனங்களும் ஏற்படும். ஆனால், இந்த ஆட்சி மீது மக்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை. மீண்டும், 2021ல், அ.தி.மு.க., ஆட்சி அமையும். லோக்சபா தேர்தலில், தி.மு.க., பொய் பிரசாரத்தை நம்பி பொதுமக்கள் ஏமாந்தனர். வரும் தேர்தலில், தி.மு.க., ஏராளமான பொய் பிரசாரம் செய்வர். இதை நாம் முறியடிக்க வேண்டும். கடந்த சில நாட்களாக, புதிதாக ஒரு வதந்தியை பரப்பி வருகின்றனர். மகனை இந்த தொகுதிக்கும், நான் பரமத்திவேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக, பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதற்கு நான் முற்றுப்புள்ளி வைக்கிறேன். தலைமை அறிவித்தால், குமாரபாளையம் தொகுதியில் மீண்டும் நான் போட்டியிடுவேன். தலைமை யாரை அறிவித்தாலும், நான் அவர்களை வெற்றி பெற வைத்து, குமாரபாளைம் தொகுதி, அ.தி.மு.க., கோட்டை என, நிரூபிப்பேன். இளைஞர்களை கட்சியில் சேர்ப்பதற்காகவும், எனக்கு உதவியாகவும் தான், என் மகன் பணியாற்றி வருகிறார். என் மகனோ, என் குடும்பத்தாரோ அரசியலுக்கு வர மாட்டார்கள் என, உறுதியாக கூறுகிறேன். என்னை உரசி பார்த்தால், இதை விட வேகமாக தான் செயல்படுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X