மே.வங்கத்தில் பா.ஜ., வராது - பிரஷாந்த் கிஷோர் சவால் டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : டிச 21, 2020 | Added : டிச 21, 2020 | கருத்துகள் (66)
Share
Advertisement
புதுடில்லி : மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ., இரட்டை இலக்கங்களை பெறவே போராடுகிறது, அதை மீறி எதுவும் நடந்தால் டுவிட்டரை விட்டே விலகுகிறேன் என சவால் விட்டுள்ளார் பிரபல அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர். அவரின் இந்த பேச்சு டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ., அரசு, பல்வேறு மாநிலங்களின் சட்டசபை தேர்தலிலும் வெற்றிப்பெற்று
#PrashantKishor, BJP, Westbengal,

புதுடில்லி : மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ., இரட்டை இலக்கங்களை பெறவே போராடுகிறது, அதை மீறி எதுவும் நடந்தால் டுவிட்டரை விட்டே விலகுகிறேன் என சவால் விட்டுள்ளார் பிரபல அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர். அவரின் இந்த பேச்சு டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ., அரசு, பல்வேறு மாநிலங்களின் சட்டசபை தேர்தலிலும் வெற்றிப்பெற்று ஆட்சியை அமைத்து வருகிறது. பா.ஜ.,வின் அடுத்த குறி மேற்கு வங்க மாநிலமாக உள்ளது. தற்போது அம்மாநிலத்தில் திரிணமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி ஆட்சி செய்கிறார். இந்த மாநிலத்தில் ஊழல் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்னை அதிகமாகி உள்ளதாக பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.


latest tamil news




இந்நிலையில் அங்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இங்கு எப்படியாவது ஆட்சியை பிடிக்க பா.ஜ. முனைப்பு காட்டி வருகிறது. பா.ஜ.வின் மத்திய அமைச்சர் அமித் ஷா கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அதோடு வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., 200 இடங்களில் வெற்றி பெறும் என்றார்.

இதனிடையே பிரபல அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் டுவிட்டரில் ஒரு பதிவு போட்டு சவால் விட்டுள்ளார். அதாவது, ''பா.ஜ., ஆதரவு ஊடகங்கள் பா.ஜ., பற்றி எல்லாவற்றையும் மிகைப்படுத்துகின்றனர். உண்மையில் மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ., இரட்டை இலக்கங்களை பெறவே போராடுகிறது. இது தான் உண்மை நிலவரம். இந்த டுவீட்டை பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள். பா.ஜ., அதை தாண்டி சிறப்பாக செய்தால் நான் இந்த தளத்தை விட்டே வெளியேறுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.


latest tamil news




2014 பார்லிமென்ட் தேர்தல், டில்லி சட்டசபை தேர்தல் உள்ளிட்டவைகளில் பிரஷாந்த் கிஷோரின் தேர்தல் பிரச்சார வியூகங்கள் தான் வெற்றிக்கு பெரிதும் உதவியதாக பலரும் நம்பினர். இதனால் இந்திய அளவில் பல்வேறு கட்சியினரும் தங்களுக்கு உதவ அவரை கேட்டு வருகின்றனர். தமிழகத்தில் கூட திமுக., அவரை நாடி உள்ளது. அப்படியான சூழலில் பிரஷாந்த் கிஷோரின் இந்த சவால், தேசிய அளவில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் இந்த கருத்தை பலரும் வரவேற்றும், எதிர்த்தும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் சமூகவலைதளமான டுவிட்டரில் அவரின் டுவீட் தொடர்பான கருத்துக்களும், விவாதங்களும், மீம்ஸ்களும் #PrashantKishor என்ற ஹேஷ்டாக்கில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan G - Chennai,இந்தியா
22-டிச-202013:22:02 IST Report Abuse
Krishnan G திரு பிரசாந்த் கிஷோர் அவர்களே, உங்களுக்கு வரவிருக்கும் தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும். அடுத்த ஆண்டு உங்களின் மார்க்கெட் கீழிறங்கி இருக்கும் நேரத்தில் உங்கள் சவாலுக்கான பதில் உங்களுக்கே தெரியவரும்./
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
22-டிச-202008:36:01 IST Report Abuse
Nagarajan D டேய் நீ ட்விட்டரை விட்டு விலகுவதால் யாருக்கடா லாபம்? நீ எவனுக்கெல்லாம் வேலை பார்க்கிறாயா அவனுக்கு தான் நஷ்டம்.. நீ உன் பேமெண்ட் வாங்கி விட்டாய்... நீயே கிறுக்கா அல்லது நீ வேலை செய்யும் கட்சிகளின் தாக்கம் உன்னை கிறுக்கனாக மாற்றுகிறதா?
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
21-டிச-202021:46:53 IST Report Abuse
Kalyan Singapore இந்த தொழிலை விட்டே விளக்குவாரா ?
Rate this:
vidhuran - chennai,இந்தியா
22-டிச-202006:31:06 IST Report Abuse
vidhuran மேற்கு வங்கத்தில் பாஜக வரவில்லை என்றால் அந்த மக்கள் கஷ்டப்பட போகிறார்கள். இவர் ட்விட்டரில் இருந்து விலகுவதால் என்ன நடக்க போகிறது? வேறு ஏதாவது ஒரு கட்சியில் கடை விரிப்பார் அவ்வளவுதானே? மொத்தத்தில் மக்களை எவ்வளவு துச்சமாக மதிக்கிறார் இந்த வியாபாரி என்பது நன்கு தெரிகிறது. அப்படி அங்கு நடந்தால் இவரின் மார்க்கெட் உயரும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X