* தெற்கு டில்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் 14 வயது சிறுமியை 17 வயது இளைஞன் பேசி மயக்கி பலாத்காரம் செய்துள்ளார். இவருடன் நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

* ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே நீம்ரானாவில் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் பாலியல் புகாரில் கைது. பல மாணவிகளிடம் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வழங்கிட பாலியல் செயலில் ஈடுபட வலியுறுத்தி உள்ளார் இந்த ஆசிரியர்.
* ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் நிலப்பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் பல வாகனங்கள் நொறுக்கப்பட்டன.
* சிக்கிம் மாநிலம் நதுலா பகுதியில் ராணுவ வாகனம் விபத்தில் சிக்கியது. 4 வீரர்கள் பலியாயினர்.
தமிழக நிகழ்வு
* கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே வடக்கு தாமரைகுளத்தை சேர்ந்த நாகராஜன் 48. குடிப்பழக்கம் கொண்ட இவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தூக்கு போட்டு தற்கொலை.

* திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைத்ததால் மனம் உடைந்து புதுப்பெண் தற்கொலை.
உலக நடப்பு !
அமெரிக்க நிறுவனத்திடமிருந்து 2.6 மில்லியன் டாலர் மதிப்புள்ள வைரம் கடன் பெறுவதற்கு தவறான தகவல்களை அளித்தததாக நிரவ்மோடி சகோதரர் நேகல் மோடி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE