அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேளாண் சட்டத்தில் காங்., செய்ய முடியாததை பாஜ., செய்துள்ளது: குஷ்பு

Updated : டிச 21, 2020 | Added : டிச 21, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
சென்னை: வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பா.ஜ., செய்துள்ளதாக பாஜ.,வில் உள்ள நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியில் செய்தித்தொடர்பாளராக இருந்து சமீபத்தில் பா.ஜ.,வில் சேர்ந்த நடிகை குஷ்பு, மதுரையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500
Khushbu, BJP, FarmLaws, Farmers, Madurai, குஷ்பு, பாஜக, வேளாண் சட்டம், விவசாயிகள்

சென்னை: வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பா.ஜ., செய்துள்ளதாக பாஜ.,வில் உள்ள நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் செய்தித்தொடர்பாளராக இருந்து சமீபத்தில் பா.ஜ.,வில் சேர்ந்த நடிகை குஷ்பு, மதுரையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவது தவறல்ல. எல்லா செயல்பாடுகளுக்கும் மாற்று கருத்துகள் இருக்கும். நல்லது நடந்தாலும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என கமல்ஹாசன் கூறியது வரவேற்கத்தக்கது.


latest tamil news


தமிழகத்தில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பா.ஜ., தலைமை மட்டுமே முடிவு செய்யும். இது தொடர்பாக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, முதல்வர் பழனிசாமி இணைந்து பேசுவார்கள். எதிர்க்கட்சிகளால் தூண்டிவிடப்பட்ட போராட்டம் தான் விவசாயிகள் போராட்டம். விவசாயிகள் வாழ்வில் விளையாட வேண்டாம். வேளாண் சட்டத்தை அனைவரும் படித்து பார்க்க வேண்டும். வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பா.ஜ., செய்துள்ளது. விவசாயிகளை பாதுகாக்கவே சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
22-டிச-202008:30:19 IST Report Abuse
தல புராணம் என்ன செஞ்சாங்க ?? கார்ப்பரேட் கிட்டேருந்து நல்லா கமிஷன் அறுவடை பண்ணி, விவசாயிகளுக்கு ஆப்பு வெச்சிருக்காங்க..
Rate this:
Cancel
Khalil - Chicago,யூ.எஸ்.ஏ
22-டிச-202008:16:11 IST Report Abuse
Khalil யோவ் மக்களுக்கு சாப்பாடு போடுங்கய்யா வேற வாய் வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பா.ஜ., செய்துள்ளது இது வேறவாய்
Rate this:
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
22-டிச-202007:10:28 IST Report Abuse
Dr.C.S.Rangarajan விவசாயமே முதலும் , முடிவுமாக இருக்க முடியாது . பஞ்சாபிலும் மற்றய அண்டைய மாநிலங்களின் வேளாண் உற்பத்தி மட்டுமே நாட்டின் தேவைக்கதிகமான நிலைமை தொடர்ந்தால் மற்ற மாநில வேளாண் பொருட்களுக்கு நுகர்வோரை காண்பதரிதாய் போய்விடும் கார்பொரேட் எதிரிகள் அல்லவே வேலை வாய்ப்புக்களை வழங்குவதுடன் வேளாண் பொருட்களை பலநாட்களுக்கு பாதுகாப்பாக உண்ணும் உணவாக மாற்றித்தரும் அவர்களின் பங்கு விவசாயிகளுக்கு தேவை இல்லையா ? கரும்பு உற்பத்தி கார்பொரேட் இல்லாமால் பெருத்தோங்கமுடியுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X