புதுடில்லி: தற்போதைய உலகில் பல சிக்கல்களை எதிர்கொள்ள புத்தரின் போதனைகள் உதவுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தோ- ஜப்பான் சம்வாத் மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அரசாங்கங்கள் தங்கள் கொள்கைகளில் மனிதநேயத்தை கடைபிடிக்க வேண்டும். மற்றொருவரை கீழே தள்ளி விட்டு முன்னேறி செல்லாமல், அனைவரும் ஒன்றிணைந்து வளர வேண்டும். அதேபோல் பாரம்பரிய புத்த இலக்கியங்கள் மற்றும் வேதங்கள் பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்காக நூலகம் ஒன்றை அமைக்க வேண்டும். இதற்கு தேவையான உதவிகளை செய்வதற்கு இந்தியா தயாராக இருக்கிறது.

புத்த மதத்தின் சிறந்த இலக்கியங்கள், பல்வேறு உலக நாடுகளில் உள்ள மடங்களில் காணப்படுகிறது. தற்போதைய உலகில் பல சிக்கல்களை எதிர்கொள்ள புத்தரின் போதனைகள் உதவும். அனைத்து நூல்களையும் டிஜிட்டலில் மாற்றி, அனைவருக்கும் உதவும் வகையில் கொடுக்க வேண்டும், புத்த துறவிகளுக்காக அவரவர் மொழிகளில் இந்த நூல்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE