கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிக்க வாய்ப்பில்லை : உயர்நீதிமன்றம் காட்டம்

Added : டிச 21, 2020
Share
Advertisement
மதுரை : சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நிகழ வாய்ப்பில்லை என கிருதுமால் நதி வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தியை பதிவு செய்தது.மதுரையில் கிருதுமால் நதி கால்வாயை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து அவர்கள், 'கால்வாய் புறம்போக்கை பல ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம். பட்டா வழங்கக்கோரி


மதுரை : சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நிகழ வாய்ப்பில்லை என கிருதுமால் நதி வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தியை பதிவு செய்தது.
மதுரையில் கிருதுமால் நதி கால்வாயை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து அவர்கள், 'கால்வாய் புறம்போக்கை பல ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம். பட்டா வழங்கக்கோரி வருவாய்த்துறையிடம் விண்ணப்பித்துள்ளோம். மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்ப அதிகாரம் இல்லை. நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்,' என மனுக்கள் தாக்கல் செய்தனர்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.
மாநகராட்சி தரப்பு, 'கிருதுமால் நதி பொதுப்பணித்துறைக்கு சொந்தமானதாக இருந்தாலும், அதில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பராமரிக்கும் பொறுப்பு 2005 ல் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு வழக்கில் இந்நீதிமன்ற உத்தரவுப்படி கிருதுமால் நதியை மீட்கும் வகையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது' என தெரிவித்தது.
அரசு தரப்பு, 'கிருதுமால் நதி பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளது,' என தெரிவித்தது.
சுருங்கிய கிருதுமால்
நீதிபதிகள்:கிருதுமால்நதிமுழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் உதவியுடன் ஆக்கிரமிப்பாளர்கள் சுவர் எழுப்பியுள்ளனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நிகழ வாய்ப்பில்லை. நீர்நிலைகளை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால், பல ஆண்டுகளாக இடத்தை அனுபவித்து வருகிறோம்; பட்டா வழங்க வேண்டும் என மனுதாரர்கள் எப்படி உரிமை கோர முடியும்.
முன்னுதாரண வழக்கு
தனது பொறுப்பை ஒரு துறையிலிருந்து பிற துறைகளுக்கு எப்படி அதிகாரிகள் மாற்றுகின்றனர் என்பதற்கு இது முன்னுதாரணமான வழக்கு. இதை உணர்ந்துதான் நிர்வாக சீர்திருத்த கமிஷனை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் தமிழக அரசு அமைத்தது. அதில் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும், ஒவ்வொரு நிலையிலும் பொறுப்புகளை நிர்ணயிக்க வேண்டும் என்பது ஒரு பரிந்துரை. அதை ஏற்று பொறுப்புகளை நிர்ணயிப்பது தொடர்பாக அனைத்துத்துறை தலைவர்களும் உத்தரவுகள் பிறப்பிக்க 2010 ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
கிருதுமால் நதி பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. அதை பராமரிக்கும் பொறுப்பு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. பொதுப்பணித்துறைக்கே நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற மதுரை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாநகராட்சி தரப்பில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஜன.,முதல்வாரம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X