இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்

Added : டிச 21, 2020
Share
Advertisement
டெல் அவிவ் : இஸ்ரேலில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.மேற்காசிய நாடான இஸ்ரேலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.72 லட்சமாக உயர்ந்துள்ளது; பலி எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளது. வைரஸ் பரவலை தடுக்க இஸ்ரேல் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்கிடையே அமெரிக்காவின் 'பைசர்'
 இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்

டெல் அவிவ் : இஸ்ரேலில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

மேற்காசிய நாடான இஸ்ரேலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.72 லட்சமாக உயர்ந்துள்ளது; பலி எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளது. வைரஸ் பரவலை தடுக்க இஸ்ரேல் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்கிடையே அமெரிக்காவின் 'பைசர்' மற்றும் 'மாடர்னா' நிறுவனங்களின் கொரோனாவுக்கான தடுப்பூசிகளை உடனடியாகப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்பட்டன.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணிகளை இஸ்ரேல் அரசு நேற்று துவங்கியது.அதன்படி பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் யூலி எடல்ஸ்டெய்னுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.முதற்கட்டமாக நாட்டில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி மருந்து செலுத்தப்பட உள்ளது. இவர்களைத் தொடர்ந்து வயதானோருக்கும் கொரோனாவால் எளிதில் பாதிப்பு ஏற்படக்கூடிய நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
ஒரு நாளுக்கு 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பைசர் நிறுவனத்திடம் இருந்து 80 லட்சம் தடுப்பூசி 'டோஸ்'களுக்கும் மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 60 லட்சம் டோஸ்களுக்கும் இஸ்ரேல் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஒவ்வொருவருக்கும் இரண்டு டோஸ்கள் கொடுக்கப்படவேண்டும் என்பதால் இதன் வாயிலாக 70 லட்சம் மக்களுக்கு இரண்டு டோஸ்களும் முதற்கட்டத்தில் செலுத்தப்பட்டுவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X