பாட்னா : பீஹார் மாநிலத்தின் ராஜ்கிர் வனப்பகுதியில் சுற்றுலா பயணியர் 'ஸ்கை வாக்' மேற்கொள்ள கண்ணாடி மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
பீஹார் மாநிலத்தின் ராஜ்கிர் வனப்பகுதியில் சுற்றுலா ஆர்வலர்கள் 'நேச்சர் சபாரி' எனப்படும் இயற்கை சுற்றுலா மேற்கொள்வதற்கான கட்டமைப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. இது முதல்வர் நிதிஷ் குமாரின் கனவு திட்டமாக கருதப்படுகிறது.இங்கு வருவோர் 'ஸ்கை வாக்' மேற்கொள்ள கண்ணாடி மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.அப்போது கண்ணாடி பாலம் மிருக காட்சி சாலை மிருகங்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் அவற்றுக்கான உணவுகள் சமையலறை விலங்கு சபாரிக்கான வாகனங்கள் உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
இங்கு நேச்சர் சபாரிகளுடன் விலங்குகள் சபாரியை இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அவற்றை தனித்தனியே மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கூறினர்.நேச்சர் சபாரியை முழுக்க வனப்பகுதியில் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்பதே இதற்கு காரணம். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த சபாரிகள் தொடங்கப்படும். மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE