பெங்களூரு : பெங்களூரு விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் வந்த முன்னாள் பா.ஜ. - எம்.எல்.ஏ. போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது.தலைநகர் பெங்களூரில் உள்ள கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று வழக்கம் போல் பயணியரின் உடமைகள் பரிசோதிக்கப்பட்டன.அப்போது அங்குவந்த பா.ஜ.வின் முன்னாள் எம்.எல்.ஏ. வான மணப்பா வஜ்ஜலின் உடமைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவரது கைப்பை 'ஸ்கேனர்' வாயிலாக சோதிக்கப்பட்டபோது அதில் துப்பாக்கித்தோட்டாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவரது பையில் இருந்த16 தோட்டாக்களும் சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய தொழில்பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து விசாரித்து சட்ட ரீதியிலான நடவடிக்கையை எடுக்க சி.ஐ.எஸ்.எப். அதிகாரிகள் மணப்பா வஜ்ஜலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மணப்பா வஜ்ஜல் தெலுங்கானா தலைநகர் ஐதராபாதிற்கு பயணம் மேற்கொள்ள இருந்தது தெரிய வந்துள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இதே விமானநிலையத்தில் கடந்த 15ம் தேதி துப்பாக்கி தோட்டாவுடன் வந்த பைசல்காஜி என்பவர் கைதுசெய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE