பொது செய்தி

தமிழ்நாடு

ஒருங்கிணைந்தது வியாழன்- சனி கோள்கள்

Updated : டிச 21, 2020 | Added : டிச 21, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
நீண்ட இரவு உடைய, கதிர் திருப்ப நாளான இன்று (டிச.21) , வான்வெளியில், 'பெரும் பேரிணைவு' என்ற, வியாழன் - -சனி கோள்கள் இணைந்து, அடிவானில் நட்சத்திரம் போல ஒளிரும், அபூர்வ நிகழ்வு நடந்தது. சில எரிகற்களும் விழுந்தன.இந்த அபூர்வ நிகழ்வு குறித்து, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தினர் செயல் இயக்குனர், சவுந்திராஜ பெருமாள் கூறியதாவது:சூரிய குடும்பத்தில் உள்ள ஜூபிடர் என்ற வியாழன்
 Jupiter And Saturn Cheek-To-Cheek In Rare Celestial Dance Tonight

நீண்ட இரவு உடைய, கதிர் திருப்ப நாளான இன்று (டிச.21) , வான்வெளியில், 'பெரும் பேரிணைவு' என்ற, வியாழன் - -சனி கோள்கள் இணைந்து, அடிவானில் நட்சத்திரம் போல ஒளிரும், அபூர்வ நிகழ்வு நடந்தது. சில எரிகற்களும் விழுந்தன.இந்த அபூர்வ நிகழ்வு குறித்து, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தினர் செயல் இயக்குனர், சவுந்திராஜ பெருமாள் கூறியதாவது:
சூரிய குடும்பத்தில் உள்ள ஜூபிடர் என்ற வியாழன் கோளும், சனி கோளும் ஒளிப்புள்ளிகள் போல காணப்படும். அதில், சற்று பிரகாசமாக இருப்பது வியாழன் கோள்.இவை, இரண்டும் வாயுப் பெருங்கோள்கள் எனப்படுகின்றன. வியாழன் கோளை பொறுத்தவரை, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருகிறது. சனி கோள், 30 ஆண்டுகளில் சுற்றி வருகிறது.


latest tamil news





20 ஆண்டிற்கு ஒரு முறை



ஒவ்வொரு, 20 ஆண்டிற்கு ஒரு முறை, இரு கோள்களும் ஒரே திசையில் இருக்கும். அப்போது, இரண்டுக்கும் இடைப்பட்ட தொலைவு, 1.2 டிகிரியாக கோணத்தில் இருக்கும்.கடந்த, 2000ல் நடந்த நிகழ்வில், இவற்றின் தொலைவு, 1.1 டிகிரி கோணத்தில் இருந்தது. இன்றைய (டிச.21) ,நிகழ்வில், இரண்டு கோள்களுக்கும் இடைப்பட்ட தொலைவு, 0.1 டிகிரி கோணத்தில் இருந்தது. இது போல, மிக நெருக்கத்தில் இருந்த நிகழ்வு, 397 ஆண்டுளுக்கு முன், 1623ல் நடந்துள்ளது.


அடுத்து 2080ல்!



அடுத்த நிகழ்வுகள், 2040 அக்., 31, 2060 ஏப்., 7ல் நடக்கும். அப்போது, இருகோள்களுக்கும் இடைப்பட்ட தொலைவு, 1.1 டிகிரி கோணத்தில் இருக்கும். வரும், 2080 மார்ச், 15ல் நடக்கும் நிகழ்வில், இரு கோள்களின் தொலைவு மீண்டும், 0.1 டிகிரி கோணத்தில் இருக்கும்.


பூமியில் மாற்றமா?



சூரிய குடும்பத்தில் வியாழன், சனி கோள்கள் சிறியவை. மிகவும் தொலைவில் உள்ளன. வியாழன் கோள், 88.6 கோடி கி.மீ., தொலைவில் இருந்தது. சனி கோள், 162 கோடி கி.மீ., தொலைவில் இருந்தது.இவற்றுக்கு இடைப்பட்ட தொலைவு, 73 கோடி கி.மீ., சந்திரனை விட, 10 லட்சத்தில் ஒரு பங்கு தான் இவற்றின் ஈர்ப்பு விசை. எனவே, இவை இரண்டும் இணைவதால், பூமியில் எந்தவித மாற்றமும் ஏற்படாது.


கதிர் திருப்ப நாள்


இந்நாளில் முக்கிய திருப்பமும் உள்ளது. அது, 'கதிர் திருப்ப' நாள். டிச., 20வரை சூரியன் தென்கோடிக்கு செல்லும்; அதாவது, கடக ரேகைக்கு நேராக ஒளிரும். 21ம் தேதி முதல் சூரியன் வடக்கு நோக்கி திரும்ப ஆரம்பிக்கும். அதன் காரணமாக இரவு நேரம் அதிகம் காணப்படும்.
நேற்று மூன்றாவது நிகழ்வாக எரிகல் பொழிவு நடந்தது. ஒரு மணிநேரத்தில், ஐந்துக்கும் மேற்பட்ட எரிகற்களை காண முடிந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.வானம் நேற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டதால், இந்த அபூர்வ நிகழ்வுகள், தெளிவாக தெரியவில்லை.


Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
22-டிச-202008:28:42 IST Report Abuse
Loganathan Kuttuva இந்த ஆராய்ச்சி மையம் வட தமிழகத்தில் உள்ளது .
Rate this:
Cancel
Sathya Sothanai - NewYork,யூ.எஸ்.ஏ
22-டிச-202004:20:36 IST Report Abuse
Sathya Sothanai சங்கிகளுக்கு எந்த பேராபத்து இல்லையே .........
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-டிச-202003:19:06 IST Report Abuse
J.V. Iyer இதனால் உலகம் க்ஷேமமாக இருந்தால் சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X