பொது செய்தி

தமிழ்நாடு

யானை வழிதடம் ஆட்சேபனை! கோரிக்கை அளிக்க அறிவுரை

Added : டிச 21, 2020
Share
Advertisement
கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை சீகூர் பகுதியில் யானை வழித்தடங்களில் உள்ள விடுதி கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவை அக்., 14ம் தேதி சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. யானை வழித்தடங்களை மீட்க கோறும் நடவடிக்கையாக முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளது.இக்கமிட்டி கடந்த மாதம் மூன்று நாட்கள்

கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை சீகூர் பகுதியில் யானை வழித்தடங்களில் உள்ள விடுதி கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவை அக்., 14ம் தேதி சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. யானை வழித்தடங்களை மீட்க கோறும் நடவடிக்கையாக முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளது.
இக்கமிட்டி கடந்த மாதம் மூன்று நாட்கள் வாழை தோட்டம், பொக்காபுரம், விபூதிமலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், முதுமலை துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் வெளியிட்ட அறிக்கை: 'யானை வழித்தடம் பாதிப்புக்குள்ளாகி, ஆட்சேபனைகள் தெரிவிக்க உள்ளவர்கள், தங்கள் பாதிப்புகளையும் அதன் விபரங்களையும் கோரிக்கைகளும் ஆதாரமாக உள்ள ஆவணங்களின் நான்கு நகல்களை, ஆங்கில மொழிபெயர்ப்புடன் இணைத்து, 'அசல் பிரமான பத்திரம்' மற்றும் அதன் மூன்று நகல்கள் அனைத்தும், ஊட்டி பிங்கர் போஸ்ட், ஜிம்கானா கிளப் சாலை, வனவியல் விரிவாக்க அலுவலக கட்டிடத்தில் அமைந்துள்ள, உச்சநீதிமன்ற மூலம் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு அலுவலகத்தில் பிப்., 14ம் தேதி 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என்ற பொது அறிவிப்பை விசாரணைக் குழுவின் தலைவர் முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதி வெங்கட்ராமன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது' இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X