சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

இரட்டை வேடம் ஏன்?

Added : டிச 21, 2020
Share
Advertisement
இரட்டை வேடம் ஏன்?'அரசியலில் இவரைப் போன்ற ஜெகஜ்ஜாலக் கில்லாடியைப் பார்க்கவே முடியாது' என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கிண்டலடிக்கின்றனர், மஹாராஷ்டிரா மாநில அரசியல்வாதிகள். சரத் பவார், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்.விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதுடன், குறிப்பிட்ட சில தொழில்

 அக்கம் பக்கம்


இரட்டை வேடம் ஏன்?



'அரசியலில் இவரைப் போன்ற ஜெகஜ்ஜாலக் கில்லாடியைப் பார்க்கவே முடியாது' என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கிண்டலடிக்கின்றனர், மஹாராஷ்டிரா மாநில அரசியல்வாதிகள். சரத் பவார், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்.விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதுடன், குறிப்பிட்ட சில தொழில் அதிபர்களின் பெயர்களை கூறி, அவர்களுக்காகவே, இந்தச் சட்டங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளதாக புகார் கூறி வருகிறார்.

இந்த நிலையில் தான், சமீபத்தில், தன், 80வது பிறந்தநாளை, மும்பையில் தடபுடலாக கொண்டாடினார் சரத் பவார். இந்த விழாவுக்கு, பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வந்து, சரத் பவாரை வாழ்த்தி, அவரது ஆசி பெற்றுச் சென்றனர். இதில், ஆச்சரியமான விஷயமும் அரங்கேறியது. வேளாண் சட்டங்கள் குறித்த விஷயத்தில், எந்தெந்த தொழில் அதிபர்களை எல்லாம், சரத் பவார் விமர்சித்தாரோ, அவர்களும் பிறந்தநாள் விழாவுக்கு

வந்திருந்தனர். பவாரைச் சந்தித்து, வாழ்த்து தெரிவித்ததுடன், அவருடன் தொழில் சார்ந்த விஷயங்களையும் பேசி விட்டுச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த, பா.ஜ., பிரமுகர்கள், கடும் கோபம் அடைந்தனர். 'மூத்தத் தலைவராக இருக்கும் சரத் பவார், தொழில் அதிபர்கள் விஷயத்தில் ஏன் இரட்டை வேடம் போடுகிறார்; இது, அவரது அரசியல் அனுபவத்துக்கு பெருமை சேர்க்குமா' என, எரிச்சலுடன் கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X