சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

குளிர் ஜுரத்தில் நடுங்கும் கூட்டுறவு அதிகாரிகள்!

Added : டிச 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
குளிர் ஜுரத்தில் நடுங்கும் கூட்டுறவு அதிகாரிகள்!''உளவுத்துறை சர்வேயில, உருப்படியா ஒருத்தரும் தேறலையாம் பா...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார், அன்வர்பாய்.''ஆளுங்கட்சி தகவலாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''ஆமாம் பா... ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்துல, 13 சட்டசபைத் தொகுதிகள்ல, 5 அ.தி.மு.க.,விடமும், தி.மு.க.,விடம் 7ம் இருக்குது... குடியாத்தம் தொகுதி

 டீ கடை பெஞ்ச்


குளிர் ஜுரத்தில் நடுங்கும் கூட்டுறவு அதிகாரிகள்!



''உளவுத்துறை சர்வேயில, உருப்படியா ஒருத்தரும் தேறலையாம் பா...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார், அன்வர்பாய்.

''ஆளுங்கட்சி தகவலாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''ஆமாம் பா... ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்துல, 13 சட்டசபைத் தொகுதிகள்ல, 5 அ.தி.மு.க.,விடமும், தி.மு.க.,விடம் 7ம் இருக்குது... குடியாத்தம் தொகுதி காலியா இருக்குது பா...

''இதுல, 5 எம்.எல்.ஏ.,க்களுக்கும் மறுபடி, 'சீட்' குடுத்தா, தேறுவாங்களான்னு, உளவுத்துறை மூலமா, ஆளுங்கட்சி மேலிடம், அறிக்கை கேட்டது...

''இதுல, 'ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.,வான அமைச்சர் வீரமணி செயல்பாடுகள் சிறப்பா இல்லை... இப்ப, ஆறு மாசமா தான் தொகுதிக்குள்ள தலை காட்டுறார்... கடுமையாக போராடுனா தான் ஜெயிக்க முடியும்'னு அறிக்கையில சொல்லிட்டாங்க பா...

''அதே மாதிரி, 'வாணியம்பாடி எம்.எல்.ஏ.,வான, அமைச்சர் நிலோபர் கபில் செயல்பாடுகள், 80 சதவீதம் மோசமா இருக்கு... தொகுதி மக்களை பார்க்கிறதே இல்லை... மறுபடியும் அவங்க போட்டியிட்டா, ஜெயிக்கிறது சிரமம்... கே.வி.குப்பம் லோகநாதன், சோளிங்கர் சம்பத்தை, தொகுதி மக்களே மறந்துட்டாங்க... அரக்கோணம் ரவிக்கு நகரப் பகுதிகள்ல ஆதரவு குறைவாகவும், கிராமப் பகுதிகள்ல அதிகமாகவும் உள்ளது'ன்னு குறிப்பிட்டிருக்காங்க...

''இதனால, அமைச்சர்கள், எம்.எல்.ஏ., க்களை எச்சரித்த தலைமை, தொகுதி முழுக்க சுற்றுப்பயணம் போக உத்தரவு போட்டிருக்குது பா...'' என்றார் அன்வர்பாய்.

''வேலைக்கே வராம, சம்பளம் வாங்குதாரு வே...'' என, அடுத்த மேட்டருக்கு மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சென்னை பக்கத்துல இருக்கிற, அரசு போக்குவரத்துக் கழக டிப்போவுல, தேர்வு நிலை உதவியாளரா இருக்கிறவர், பெரும்பாலும் வேலைக்கே வரமாட்டேங்காரு... அப்படியே வந்தாலும், 10:30க்கு வந்துட்டு, 11:30க்கு கம்பி நீட்டிடுதாரு வே...

''அதிகாரிகள் தட்டிக் கேட்டா, 'ஆளுங்கட்சியின் நிர்வாகப் பணியாளர் சங்கத்துல, பொறுப்புல இருக்கேன்... பல வருஷமா இப்படித்தான் வந்து போயிட்டு இருக்கேன்... உங்க வேலையை பாருங்க'ன்னு தெனாவெட்டா சொல்லிடுதாரு வே...'' என்றார் அண்ணாச்சி.ஒலித்த மொபைலை எடுத்த குப்பண்ணா, ''ஹலோ... என்னது... சாரி, இது தாம்பரமும் இல்லை... சுவாமிதாஸ்ஜிவராஜ்னு யாரும் இங்க இல்லை...'' என, 'கட்' செய்தபடியே,

''அடுத்து, நம்ம பக்கமும் வருவாளோன்னு பதற்றத்துல இருக்கா ஓய்...'' என, விஷயத்திற்கு வந்தார்.குப்பண்ணா, ''பதறிட்டு இருக்கிறது யாருங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''கூட்டுறவுத் துறையில, 34 மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச் சாலைகள் இருக்கு... இதுக்கு, இணை பதிவாளர்கள் தான் தலைமையா இருக்கா ஓய்...

''இதன் சார்புல, ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடி, மருந்தகம், காஸ் ஏஜன்சி, காய்கறி கடை, பெட்ரோல் பங்க்னு பல தொழில்களை நடத்திண்டு இருக்கா... இந்தக் கடைகளுக்கு பொருட்கள் வாங்கறதுல பல முறைகேடுகள் நடக்கறது ஓய்...''இப்ப, லஞ்ச ஒழிப்பு போலீசார், ஆர்.டி.ஆ., ஆபீஸ், சார் பதிவாளர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்கள்ல அதிரடி சோதனை நடத்திண்டு இருக்காளோல்லியோ... அடுத்து, நம்ம டிபார்ட்மென்ட் பக்கமும் வந்துடுவாளோன்னு, கூட்டுறவு பண்டகச் சாலை அதிகாரிகள், குளிர் ஜுரத்துல நடுங்கிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா. பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-டிச-202006:17:11 IST Report Abuse
D.Ambujavalli ஆமாம், இதுவரை பிடித்த துறைகளிலெல்லாம் ல ஒ துறை அப்படியே தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டதா என்ன? துறை அமைச்சர் வரை பாய்ந்திருக்கும் லஞ்சம் தங்களை ஒன்றும் செய்யாது என்பது அவர்களுக்கே தெரியும். இதில் குளிருமில்லை, ஜூரமுமில்லை அதிகாரிகளுக்கெல்லாம் குளிர் விட்டு பலகாலம் ஆயிற்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X