புதுடில்லி: பிரிட்டனில் அதிவிரைவாக பரவிவரும் புதிய வகை வைரஸால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில் 'COVID20' என்ற ஹேஸ்டேக் டிரண்டாகி வருகிறது.

2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கொரோனா வைரஸ்கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு உலக சுகாதார அமைப்பு கோவிட்-19 (COVID19) என பெயரிட்டது. அந்த கொரோனா வைரஸ் ஒரு வருடத்திற்கு மேலாக மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில்பிரிட்டனில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.இதனால், உலக நாடுகள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளன. பல்வேறு நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை தடை செய்துள்ளன. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என தகவல்களும் பரவி வருகிறது.

தற்போது கொரோனா வைரசின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளதால் இணையதள வாசிகள் அதை டிரண்ட் செய்து வருகின்றனர்.அந்த வகையில் 'COVID20' என்ற ஹேஸ்டேக் மூலம் இணையதள வாசிகள் கொரோனா தொடர்பான செய்திகளை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் 'COVID20' என்ற ஹேஸ்டேக் டிரண்ட் ஆகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE