ஈரானுடனான அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தம்: மீண்டும் இணைய அமெரிக்கா திட்டம்

Updated : டிச 21, 2020 | Added : டிச 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
'ஜாயின்ட் கம்பிரிஹென்சிவே பிளான் ஆஃப் ஆக்ஷன்' என்கிற திட்டத்தை 2015ஆம் ஆண்டு உருவாக்கியது ஐநா சபை. ஐநாவின் பாதுகாப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்டவை இதில் கையெழுத்திட்டன. உலக சமாதானத்துக்காக அணுஆயுதங்கள் சோதனையை தடுக்க உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தில் இருந்து 2017-ஆம் ஆண்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு விலகியது.தற்போது ஜோ பைடன்

'ஜாயின்ட் கம்பிரிஹென்சிவே பிளான் ஆஃப் ஆக்ஷன்' என்கிற திட்டத்தை 2015ஆம் ஆண்டு உருவாக்கியது ஐநா சபை. ஐநாவின் பாதுகாப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்டவை இதில் கையெழுத்திட்டன. உலக சமாதானத்துக்காக அணுஆயுதங்கள் சோதனையை தடுக்க உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தில் இருந்து 2017-ஆம் ஆண்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு விலகியது.



latest tamil news



தற்போது ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்க உள்ள நிலையில் இந்த திட்டத்தில் மீண்டும் இணைந்து செயல்பட அவர் ஆர்வமாக உள்ளார். சர்வதேச அணுஆயுதத் சோதனை தடுப்பு நிறுவனத்தின் வழிகாட்டுதலின் பேரில் ஈரானில் யுரேனிய அணுஆயுத சோதனையை கட்டுப்படுத்த இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின்படி ஈரானில் அடுத்த பத்து வருடங்களுக்கு 3.67% மட்டுமே யுரேனியம் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த வரம்பைத் தாண்டி ஈரான் செயல்படக்கூடாது. ஈரான் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில் கருத்து வேறுபாட்டால் அமெரிக்கா இதில் இருந்து விலகியது.
அணுவாயுத சோதனை மூலமாக அவ்வப்போது ஈரான் கடந்த பல ஆண்டுகளாக மேலை நாடுகளை அச்சுறுத்தி வந்தது. குறிப்பாக இதனால் அமெரிக்கா அதிகமாக அச்சுறுத்தப்பட்டது. தற்போது 'ஜாயின்ட் கம்பிரிஹென்சிவே பிளான் ஆஃப் ஆக்ஷன்' திட்டத்தில் மீண்டும் இணைய ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார். இதன்மூலமாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள கருத்து மோதல் குறைந்து இருநாடுகளும் சுமூக உறவை மேற்கொள்ளும் என ஜனநாயக கட்சி நம்புகிறது.
சமீபத்தில் ஈரானில் புரட்சிகர ராணுவப்படைத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனையடுத்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. ஒபாமா ஆட்சி காலத்தில் ஈரானுடன் போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களை நீர்த்துப்போகச் செய்யும் அளவுக்கு டிரம்ப் அரசு ஈரான் முகமது அலி கமேனி அரசை அதீதமாக பகைத்துக் கொண்டது.


latest tamil news



தற்போது மீண்டும் அமெரிக்க ஜனநாயகக் கட்சி ஆட்சியைப் பிடித்து இருப்பதால் அணுஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இணைவதன் மூலமாக ஈரானுடன் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்ய ஜோ பைடன் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
22-டிச-202008:50:43 IST Report Abuse
Rpalnivelu இஸ்ரேலின் கருத்தையும் மற்ற ஈரானின் எதிரி நாடுகளின் கருத்தையும் கேளுங்க பிறகு முடிவெடுங்க இல்லையென்றால் பிரச்னை தீராது
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
22-டிச-202000:12:04 IST Report Abuse
கொக்கி குமாரு அமெரிக்காவுக்கும், ஈரானுக்குமான பேச்சுவார்த்தையில் சுடலைகானுக்கு அழைப்பு இருக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X