சென்னை : 'தமிழகத்தையும் தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையும் இருள் மயமாக்கும் மின்வாரிய தனியார் மயத்தை உடனே கைவிட வேண்டும்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது நேற்றைய அறிக்கை:தனியார் உடனான ஒப்பந்தங்கள் ஆட்சியில் இருப்பவர்களுக்கு தனிப்பட்டமுறையில் பெரும் லாபம் தருவதாக இருக்கலாம். அ.தி.மு.க. அரசும் மின் துறை அமைச்சரும் இது தற்காலிகமானது என பொய் முலாம் பூசுகின்றனர்.மின் தொழிலாளர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தனியார்மயத்தை முற்றாக கைவிட வேண்டும். இல்லையேல் தமிழக மக்களின் பேராதரவுடன் தி.மு.க., அரசு அமையும் போது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் கிராம சபை: நாளை காலை 9:00 மணிக்கு அ.தி.மு.க., வை நிராகரிப்போம் என்ற தலைப்பிலான கிராம சபை , வார்டு கூட்டங்களில் பங்கேற்போர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
அதன் விவரம்: ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம் ஊராட்சி, துரைமுருகன்- வேலூர் மாவட்டம் மேல்பட்டி ஊராட்சி, டி.ஆர்.பாலு-திருவள்ளூர் மாவட்டம் நடுக்குந்தகை ஊராட்சி, கே. என். நேரு- திருச்சி மாவட்டம் பெருவிளை நல்லூர் ஊராட்சி, பொன்முடி-விழுப்புரம் மாவட்டம் ஏானாதி ஆ.ராஜா, சென்னை வடக்கு மாவட்டம் பகுதி 49-வது வட்டம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கால்பந்தாட்ட வீரருக்கு உதவி
தி.மு.க. தலைமை வெளியிட்ட அறிக்கை:ஸ்பெயின் நாட்டின் சர்வதேச கால்பந்து கிளப்பான 'ஏடிஆல்க்ரானில்' விளையாட வாய்ப்பு கிடைத்தும் வறுமை காரணமாக விளையாட முடியாமல் சென்னையை சேர்ந்த இளம் கால்பந்தாட்ட வீரர் சுந்தரமூர்த்தி தவித்து வந்தார். அவர் ஸ்பெயின் சென்று விளையாட தேவையான முழுச் செலவையும் தி.மு.க. மருத்துவ அணியின் இணைச் செயலர் சுபேர்கான் ஏற்றுஉள்ளார். விசா மற்றும் டிக்கெட் உள்ளிட்டவற்றையும் வீரருக்கு ஸ்டாலின் வழங்கி வாழ்த்து கூறினார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE