புதுடில்லி : டில்லியில் , மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் நடந்தது.
அடுத்த ஆண்டு, பிப்.,1ம் தேதி, 2021 - 22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, பல்வேறு துறையினருடன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அவர், பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக, ஏற்கனவே, நிதி, பங்குச் சந்தைகளின் பிரதிநிதிகள், தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்புகள், பொருளாதார வல்லுனர்கள் ஆகியோருடன், ஆலோசனை நடத்தியுள்ளார்.இந்நிலையில், டில்லியில் , மத்திய பட்ஜெட் தயாரிப்பிற்கான, 11வது ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.21) நடந்தது.
![]()
|
நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர், நிதித் துறை செயலர், ஏ.பி.பாண்டே, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் தருண் பஜாஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், தலைமை பொருளாதார ஆலோசகர், கே.வி. சுப்ரமணியம், அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், அடிப்படை கட்டமைப்பு, எரிசக்தி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளின் வல்லுனர்கள், தங்கள் கருத்துக்களை நிதியமைச்சரிடம் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE