பத்திரப்பதிவு ஆபீசில் பகல் கொள்ளை... பார்த்தும் பார்க்காத ஆபீசரால் தொல்லை!

Updated : டிச 22, 2020 | Added : டிச 22, 2020
Share
Advertisement
எட்டு மாதத்துக்குப்பின் திறக்கப்பட்ட மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவுக்கு 'விசிட்' செய்த சித்ராவும், மித்ராவும், அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தனர்.''என்னக்கா… கூட்டம் இவ்ளோ கம்மியா இருக்குது. இன்னும், கொரோனா பயம் போகலையா?''''அட, நீ வேற. நம்ம மக்கள், கொரோனாவ சுத்தமா மறந்துட்டாங்க. சிட்டிக்குள்ள கூட்டத்தை பார்த்தா தெரியலையா? பார்க் ஓபன் பண்ணினது தெரிஞ்சிருக்காது
 பத்திரப்பதிவு ஆபீசில் பகல் கொள்ளை... பார்த்தும் பார்க்காத ஆபீசரால் தொல்லை!

எட்டு மாதத்துக்குப்பின் திறக்கப்பட்ட மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவுக்கு 'விசிட்' செய்த சித்ராவும், மித்ராவும், அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தனர்.

''என்னக்கா… கூட்டம் இவ்ளோ கம்மியா இருக்குது. இன்னும், கொரோனா பயம் போகலையா?''

''அட, நீ வேற. நம்ம மக்கள், கொரோனாவ சுத்தமா மறந்துட்டாங்க. சிட்டிக்குள்ள கூட்டத்தை பார்த்தா தெரியலையா? பார்க் ஓபன் பண்ணினது தெரிஞ்சிருக்காது போல,''

''நம்ம ஊரு ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ் விவகாரம், தமிழ்நாட்டையே உலுக்கிடுச்சுல்ல. எவ்வளவு 'டெக்னிக்கலா' பணத்தை லவட்டியிருக்காங்க பாத்தியா'' என்றாள் சித்ரா.

''ஆமாங்க்கா. ஊழல் விவகாரம் அம்பலமானதும், எல்லா இடத்துலயும் இருக்கற ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ் அதிகாரிகளும் உஷாராகிட்டாங்க. இதுல, சப்-ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்களில், அதிகமாக பத்திரப்பதிவு நடக்கிற அவிநாசியில இருக்கற அதிகாரி, ரொம்பவே உஷாராயிட்டாராம்,''

''போன வாரம், ஏகப்பட்ட ரிஜிஸ்ட்ரேஷன் நடந்திருக்கு. 'ரெய்டு' நடத்த விஜிலென்ஸ் போலீஸ் ரெடியானப்ப, கமிஷன் பணத்தை பக்குவமா கைமாத்தி, 'சேப்டி' பண்ணிட்டாங்களாம். இது தெரிஞ்ச, போலீஸ் ரெய்டு ஆப்ரேஷனை கை விட்டுட்டாங்களாம்,''

''ஆபீசில் ஒருத்தர், பதிவாகிற பத்திரம், டாக்குமென்ட் ரைட்டர் யாருன்னு நோட்டில் எழுதி வச்சு, சனிக்கிழமையானா, நேரடியாக போய் வசூல் பண்ணி, ஆபீசர்கிட்ட கச்சிதமா குடுத்திடறார். அதில, தனி அமவுன்ட்டையும் ஆட்டய போட்டுடுவாராம்,''

''ஆமான்டி, பக்கத்து வீட்ல இருக்க, சிவகுமார் அண்ணன் கூட, இதபத்தி என்கிட்ட சொல்லியிருக்கார்'' என்ற சித்ரா,

''அதே மாதிரி, திருப்பூர் பதிவு ஆபீஸ்ல இருக்க ஒரு லேடி ஊழியர் கூட, பணம் வாங்காம எந்த வேலையும் செய்றது இல்லையாம்,''

''அதில, குறிப்பா வில்லங்க சான்று, ஓ.கே., பண்ண, 200 ரூபா வெட்டினாதான் காரியம் நடக்குமாம். இப்டி ஒரு நாளைக்கு, 10 ஆயிரம் லஞ்சம் பாக்கறாங்களாம்,'' விளக்கினாள் சித்ரா.

அப்போது, நடைபயிற்சி செய்து கொண்டிருந்தவரிடம், ''ஹலோ, செந்தாமரை அக்கா. எப்படி இருக்கீங்க. பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. அபார்ட்மென்டில் பெரிய வீடு வாங்கிட்டீங்களாமா?'' என, சித்ரா கேட்டதும், பதில் பேசி அவர் நகர்ந்தார்.

பூங்காவில் சுண்டல் விற்று கொண்டிருந்த பெரியவரிடம் இரு பாக்கெட் வாங்கிய மித்ரா, ''அதனை சாப்பிட்டவாறே, சொல்ல மறந்துட்டேன்க்கா. தாராபுரம் மதுவிலக்கு பிரிவுல இருக்க ஒரு போலீஸ்காரர், வசூல் வேட்டைல சக்கை போடு போடறார்ன்னு போன வாரம் பேசினோம்ல. அவரை காங்கயத்துக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''அடடே, பரவாயில்லையே,'' என்ற சித்ரா, ''சிட்டிக்குள்ள இருக்கற பல 'டாஸ்மாக்' பார்கள்ல சூதாட்டம் நடக்குதாம். இதுக்காக, போலீசுக்கு மாமூல் கரெக்டா போகுதாம். பணத்தை வசூலிச்சு குடுக்கிற வேலைய, ஒரு 'பார்' ஓனர் பாத்துக்கிறாராம். 'ராஜா' கைய வைச்சா, அது 'ராங்கா' போறதில்லைன்னு சொல்றாங்க,'' சொல்லி, தண்ணீர் குடித்து விட்டு, ''மித்து போலாம் வா...'' என்றவாறு, பூங்கா கேட் நோக்கி நடந்தார்.

வண்டியில் கிளம்பி, கலெக்டர் அலுவலகத்தை கடந்தபோது, கட்சியினர் சிலர் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர்.

''கட்சிக்காரங்களுக்கு இப்பவே தேர்தல் ஜூரம் வந்துருச்சு போல,'' என்ற சித்ரா, ''ஆளுங்கட்சில புதுசா வந்த பொறுப்பாளரு, நார்த், சவுத், காங்கயம் பகுதியில இருக்கற 'பூத்' கமிட்டியை 'ஸ்ட்ராங்' பண்ணிகிட்டு இருக்காராம்,'' என, கட்சி மேட்டருக்கு தாவினாள்.

''ஓ ேஹா,''''எலக்ஷன் தேதி அறிவிச்சுட்டா, கட்சிக்காரங்களுக்கு பணம் கொடுக்கிறதுல சிக்கல் வரும்னு தெரிஞ்சுகிட்டு, முதல் தவணையா 'பூத்'துக்கு, ரெண்டாயிரத்தை பட்டுவாடா செஞ்சுட்டாருடி,''

''வேற வழி. பணம் குடுத்துதான், காரியம் ஆகும்னு, அவருக்கு தெரியாதா என்ன? அதேபோல, பல்லடம் தொகுதி தாமரை கட்சிக்கு கிடைக்கும்ங்கற நம்பிக்கைல, ஆரம்ப கால நிர்வாகி ஒருத்தரு, பணத்தை தண்ணியா செலவு செஞ்சிட்டு வந்திருக்காரு,''

''கொரோனா டைம்ல, அரிசி, பருப்புன்னு, 25 லகரம் வரை நிவாரணம் கொடுத்திருக்காருன்னு சொல்றாங்க. தனக்கு கண்டிப்பா சீட் கிடைக்கும்னு நம்பிட்டு இருந்தாரு. ஆனா, அவர 'ஓவர் டேக்' செஞ்சு, தன்னோட அப்பாவின் செல்வாக்கை பயன்படுத்தி, 'தங்க'மான ஒருத்தரு சீட் வாங்க 'ட்ரை' பண்றாராம்; இதனால, அங்க கோஷ்டி பூசல் உச்சத்துக்கு போயிடுச்சாம்,''வழியில், திடீரென போக்குவரத்து ஸ்தம்பித்து. ஒரு காருடன், லாரி உரசி கொண்டதாக, ஒரு வாகன ஓட்டி சொல்லி சென்றார்.

''இப்பெல்லாம் எந்த பிரச்னையா இருந்தாலும், கட்டப்பஞ்சாயத்து அதிகமாகிடுச்சு,'' என்றாள் சித்ரா.'உண்மைதாங்க்கா, வேலம்பாளையம் ஸ்டேஷன் சார்ந்த ஒரு விபத்து வழக்கு தொடர்பா, சம்மந்தப்பட்ட ஆட்கள்கிட்ட பேசிய ரிட்டையர்டு போலீஸ் ஒருத்தர், ஸ்டேஷனுக்கு வாங்க பேசி முடிச்சுக்கலாம்னு சொல்லியிருக்காரு'' என்றாள் மித்ரா.

''ஒரு ரிட்டையர்டு போலீசுக்கு இப்படியொரு தைரியமா?''

''இது பரவாயில்லக்கா... அவரு இப்டித்தான் பல நாட்களா வேல செஞ்சு, பணம் சம்பாதிக்கிறாராம். அதில, கணிசமான தொகை, அதிகாரிக்கும் போகுதாம்,''சித்ராவின் மொபைல் போன் சிணுங்கவே, வண்டியை ஓரமாக நிறுத்தி, ''யாரு, மனோகரன் அங்கிளா. வெளியில இருக்கேன். வீட்டுக்கு போய்ட்டு கூப்பிடறேன்,'' என, இணைப்பை துண்டித்து, வண்டியை நகர்த்தினாள்.

ரோட்டில், போக்குவரத்து போலீசார், வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். வண்டியை நிறுத்திய சித்ரா, அனைத்து ஆவணங்களையும் காட்டியபின், சென்றாள்.''அக்கா, அம்மாபாளையம் 'செக்போஸ்ட்'ல, சில போலீஸ்காரங்க, வாகன ஓட்டிகள் கிட்ட, இ-சலான் மிஷினை காண்பிச்சு, அதில், 'டிஸ்பிளே'ல ஆகும், தொகையை காட்டி, 'கோர்ட்டில இவ்ளோ கட்டணும், இங்க கட்டினால், கம்மிதான்'னு சொல்லியே, 2 ஆயிரத்த வசூல் பண்றாங்களாம்,''

''மித்து, இதில முக்கியமான விஷயம் என்னன்னா, இ-சலான் மெஷினை, இன்ஸ்., இல்லாட்டி எஸ்.ஐ.,தான் வைத்து பைன் போடணும். ஆனா, பூண்டியில மட்டும், சாதாரண போலீஸ் கூட, மெஷினை வச்சுட்டு இப்படி அலப்பறை பண்றாங்கன்னு நெனைக்கிறேன். இத வச்சு யாராவது கோர்ட்டில் கேஸ் போட்டாங்கன்னா, பிரச்னையாயிடும்டி,''

''சரிங்க்கா, இது அந்த அதிகாரிகளுக்கு தெரியாமல போகும்,'' என்ற மித்ரா, ''தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற பழமொழியை, நிரூபிச்சிட்டாங்க,'' பொடி வைத்து பேசினாள்.''இது எங்கடி? விளக்கமா சொல்லு,''

''அவிநாசி யூனியனில், பழமையான கரை பஞ்சாயத்துல இருக்க, வில்லேஜ் அசிஸ்டென்ட், ரொம்பவே அதிகாரம் பண்றாராம். மக்கள் யார் வந்தாலும், அப்டீங்க, இப்டீங்கன்னு, சொல்லி கறாரா வசூலிக்கிறாராம். அவரை பார்த்து கிராம அதிகாரியே மிரண்டு போறார்ன்னா பார்த்துக்கோயேன்''

''பல இடங்கள்ல அப்படித்தான்டி மித்து. கிராம அதிகாரிகள விட அவங்களோட அசிஸ்டென்ட்களுக்கு தான் பவர் அதிகம்,'' சொன்ன சித்ரா, ''சிட்டிக்குள்ள இருக்க டிராபிக்கில மாட்டிக்கிறதை விட, 'நடராஜா' சர்வீஸ்ல வந்துட்டு போயிடலாம் போல,'' என, சொல்லி சிரித்தாள்.''அக்கா, ஒரு நிமிஷம் வண்டிய நிறுத்துங்க,'' என்றதும், அங்கிருந்த கார் ஸ்டாண்ட் ஓரமாக சித்ரா நிறுத்தினாள்.

மொபைல் போனை எடுத்து பேசி விட்டு வைத்த மித்ரா, ''அக்கா, மாமா வந்திருக்காரு. ஊருக்கு போறதுக்கு டாக்ஸி அனுப்ப சொல்றாரு,'' என்றாள்.

உடனே, அருகிலிருந்து 'டி-போர்டு' டாக்ஸியை, வீட்டு முகவரியை கொடுத்து அனுப்பி வைத்தால் ''ஏன்டி மித்து, சொந்தக்கார் வச்சிருக்கிறவங்க, வாடகைக்கு ஓட்டுறாங்கன்னு சொல்லி, ஒரு புகார் வந்ததே, அது என்னாச்சு?''

''ஆமாங்க்கா, வாடகை கார் ஓட்டுனர் சங்கத்தினர், ரெண்டு ஆர்.டி.ஓ., கிட்ட மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லையாம். அதுக்கு கைமாறா, 'கவனிப்பு' கரெக்டா நடக்குதாம்,''

''அதுதானே, பார்த்தேன்,'' என்று சொன்ன சித்ரா, ரோட்டோரம் போதையில் தள்ளாடி சென்ற ஆசாமியை பார்த்தவாறே, ''இந்த 'டாஸ்மாக்' கடையினால, பல குடும்பங்கள் நடுத்தெருக்கு வந்திருச்சு,'' என ஆதங்கப்பட்டாள்.

''நுாத்துக்கு நுாறு உண்மைங்க்கா. ஏற்கனவே, இருக்கிற கடை பத்தாதுன்னு, புதுசா கடை வைக்க முயற்சி பண்றாங்க,''''எந்த ஊர்ல,''''அவிநாசியிலதான். சேவூர் ரோட்டில, வீடுகள் நெறயா இருக்கற இடத்துல, ஒரு கடை வைக்க ஐடியா பண்றாங்க. இதுக்கு முக்கிய காரணமே, தி.மு.க.,வில் இருந்து ஆளுங்கட்சிக்கு வந்த ஒருத்தர்தானாம்,''

''டாஸ்மாக்' சூப்பர்வைசர், அமைச்சரை சரிக்கட்டி, கடை ஏற்பாடு பண்ணி, கொஞ்ச நாளில், நல்ல விலைக்கு கை மாத்திடுவாராம். இதுக்கு சில ஆளுங்கட்சி நிர்வாகிகளும் உடந்தையாம்,'' விலாவாரியாக சொன்னாள் மித்ரா.

வழியில், 'தங்கராஜ்' பேன்ஸி ஸ்டோர்ஸில் வண்டியை நிறுத்திய சித்ரா, ''வாடி மித்து, காஸ்மெடிக்ஸ் வாங்கிட்டு போயிடலாம்'' என்றதும், மித்ராவும் கடைக்குள் சென்றாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X