அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல்: கவர்னரிடம் ஸ்டாலின் புகார்

Updated : டிச 22, 2020 | Added : டிச 22, 2020 | கருத்துகள் (120)
Share
Advertisement
சென்னை: தமிழக அரசு மீது ஊழல் புகார் குறித்த மனுவை, கவர்னரிடம் வழங்கிய ஸ்டாலின், அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.திமுக தலைவர் ஸ்டாலின், கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். அப்போது, அதிமுக அரசு மீதான 97 பக்க ஊழல் புகார் பட்டியலை வழங்கினார்.இதன் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்; தமிழக அமைச்சரவை மீதான 97 பக்க ஊழல்
D.M.K, Governor, M.K.Stalin, Stalin, TN, Tamilnadu, ஆளுநர், கவர்னர், தமிழகம், தமிழ்நாடு, தி.மு.க, ஸ்டாலின்

சென்னை: தமிழக அரசு மீது ஊழல் புகார் குறித்த மனுவை, கவர்னரிடம் வழங்கிய ஸ்டாலின், அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின், கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். அப்போது, அதிமுக அரசு மீதான 97 பக்க ஊழல் புகார் பட்டியலை வழங்கினார்.

இதன் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்; தமிழக அமைச்சரவை மீதான 97 பக்க ஊழல் புகார் பட்டியலை கவர்னரிடம் அளித்துள்ளோம். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2018 ம் ஆண்டு ஊழல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளோம்.
தமிழகத்தில் அனைத்து துறைகளில் ஊழல் நிலவுகிறது. அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் கவர்னரிடம் மனு அளித்தோம். முதல்வர், துணை முதல்வர் சொத்துகளை வங்கி குவித்தது குறித்து புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளோம். அதிமுகவினர் மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.


latest tamil news



அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களுக்கு ஆதாரங்களை திரட்டி வந்துள்ளோம். முதல்வர், துணை முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட முடியும். அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து பார்ட் ஒன் தான் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்த பார்ட் -2 விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (120)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறவோன் - Chennai,இந்தியா
22-டிச-202022:38:36 IST Report Abuse
அறவோன் "கொஞ்ச காலமாகவே இந்தியா முழுவதும் லஞ்சம், கறுப்புப்பணம், ஊழல் வியாபித்திருக்கிறது"👎👎👎
Rate this:
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
23-டிச-202013:42:58 IST Report Abuse
Dr. Suriyaஅதாவது சற்றேறக்குறைய ஒரு பத்து வருடத்திற்கு முன்னாள்...........
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
22-டிச-202022:08:01 IST Report Abuse
sankaranarayanan திருடன் வெளியே வந்து, அடுத்தவர்களை திருடன் திருடன் - என்று கூக்கூரலிடுவது போல உள்ளது. எல்லாம் ஒரே குட்டையினுள் ஓரின மட்டைதான். மாபெரும் ஊழல்களை செய்துவிட்டு, தப்பிக்க வழி தெரிந்த, திராவிட தில்லு முள்ளு கூட்டம் இந்த தீய. மு. கழகம். எல்லாம் வெளி வந்து, கூடிய விரைவில் கட்சியே இல்லாமல் போய்விடும். அப்போது வீரமணி - சூரமணி ஓசிச்சோத்து மணி - எல்லாம் இருக்கும் இடமே தெரியாது
Rate this:
Cancel
kesavan u s a - new york,யூ.எஸ்.ஏ
22-டிச-202021:42:52 IST Report Abuse
kesavan u s a ஆமா இந்த லிஸ்ட்ல முதல் பெரு ராஜா அப்புறம் கனிமொழி அப்புறம் இதா டைரக்ட் செய்த கட்டுமரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X