போலீஸ் செய்திகள்

Added : டிச 23, 2020
Share
Advertisement
35 ஐபோன்களை திருடியவர் கைதுமதுரை: அண்ணாநகரில் பிலிப்கார்ட் நிறுவனத்தின் எப் 1 சொல்யூசன் நிறுவனம் உள்ளது. இங்கு வேலை செய்த மனோஜ் என்பவர் ரூ.21.11 லட்சம் மதிப்புள்ள 35 ஐபோன்களை திருடி, அந்த பாக்ஸில் பழைய அலைபேசி பேட்டரியை வைத்தது கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்தது. இவ்வழக்கில் 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரை அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் கைது


35 ஐபோன்களை திருடியவர் கைது


மதுரை: அண்ணாநகரில் பிலிப்கார்ட் நிறுவனத்தின் எப் 1 சொல்யூசன் நிறுவனம் உள்ளது. இங்கு வேலை செய்த மனோஜ் என்பவர் ரூ.21.11 லட்சம் மதிப்புள்ள 35 ஐபோன்களை திருடி, அந்த பாக்ஸில் பழைய அலைபேசி பேட்டரியை வைத்தது கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்தது. இவ்வழக்கில் 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரை அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். தனியார் மற்றும் கடைகளில் விற்ற ஐபோன்களை மீட்டனர்.


கிணற்றில் தவறி விழுந்த சிறுமி பலி


உசிலம்பட்டி: குன்னூத்துப்பட்டி ராஜகோபால் மகள் ரித்திகா 10. பாட்டி தோட்டத்தில் கடலை செடிகள் பறித்தவர் பக்கத்தில் இருந்த தோட்ட கிணற்றில் தண்ணீர் மேலாக இருந்ததால் கழுவச் சென்றவர் தவறி விழுந்து இறந்தார்.


200 கிலோ கஞ்சா பறிமுதல்


திருமங்கலம்: சிந்துபட்டி அருகே ஈச்சம்பட்டியில் தங்கராஜ் மனைவி ரஞ்சிதம் 55, வீட்டை டி.எஸ்.பி., வினோதினி, இன்ஸ்பெக்டர் சிவசக்தி மற்றும் போலீசார் சோதனையிட்டனர். துணியால் சுற்றி பதுக்கப்பட்டிருந்த 200 கிலோ கஞ்சா மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரஞ்சிதத்தை கைது செய்தனர். மகன் ஜெயக்குமாரை 35, தேடி வருகின்றனர்.


'போக்சோ' சட்டத்தில் கைது


மேலுார்: ஒத்தப்பட்டி பாலமுருகன் 31. உறவினரின் 17 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்ததாக விரிவாக்க அலுவலர் மகாலட்சுமி புகாரில் 'போச்சோ' சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.


மாணவி தற்கொலை

உசிலம்பட்டி: கருக்கட்டான்பட்டி சின்னமுருகன் மகள் வினிஷா 16. உசிலம்பட்டி தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். நேற்று மதியம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X