அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

Updated : டிச 23, 2020 | Added : டிச 23, 2020 | கருத்துகள் (63)
Share
Advertisement
சென்னை: மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்று, நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்தநாளான இன்று (டிச.,23) தேசிய விவசாயிகள் தினமாக
DMK, Stalin, Farmers, Farm, Agriculture, FarmLaws, திமுக, ஸ்டாலின், விவசாயிகள், விவசாயம், காப்பாற்ற வேண்டும், பிரதமர், மோடி

சென்னை: மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்று, நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்தநாளான இன்று (டிச.,23) தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகள்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 7,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி, உழவர் சந்தைகள், வேளாண் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்தது என பல்வேறு சாதனைகளை நடத்திக் காட்டிய திமுக, என்றென்றும் விவசாயிகளின் நலனுக்காகவும் வேளாண் முன்னேற்றத்திற்காகவும் விவசாயிகளின் உற்ற துணையாக இருந்து, தோளோடு தோள் நின்று போராடும்.


latest tamil news


டில்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, மத்திய பா.ஜ., அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து அனைத்து மாநில விவசாயிகளும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். 'விவசாயிகள் விரும்பாத இந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுகிறேன்' என்று இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க வேண்டும். இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தைக் காப்பாற்றிப் பாதுகாத்திடப் பிரதமர், எவ்விதத் தயக்கமும் இன்றி முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Modikumar - West Mambalam,இந்தியா
24-டிச-202008:14:38 IST Report Abuse
Modikumar நான் தஞ்சையை பூர்வீகமாக கொண்டவன். எனக்கு தெரிந்து என் ஐந்து வயது முதல் நான் ஷண்முகா பொறியியல் கல்லுரியில் பொறியியல் படித்த வரை என் தந்தைக்கு விவசாயத்தில் உதவியாக இருந்துருக்கிறேன். பின்னர் வேலை நிமித்தமாக இந்தியா முழுவதும் பதினான்கு வருடம் பணி புரிந்து அயல் பணியில் தற்போது உள்ளேன். முக்கியமாக தஞ்சை கிராமங்களில் எங்கள் வயற்காடுகளில் உள்ள பனை மரத்திலிருந்து இறக்க படும் பதணி யை அப்படியே பிரெஷா குடித்து வளர்ந்தவன். தென்னை , நெல், உளுந்து, பயறு, எள், கரும்பு என முக்கிய விவசாய பணிகள் அனைத்தும் அத்துப்படி. கடந்த சில வருடங்களாக ஆஸ்திரேலியா, நியூஸ்லாண்ட் விவசாய முறைகளை கவனித்து வருகிறேன். நாம் கூறும் திருந்திய விவசாய முறையை நவீனமாக இங்கு செய்கிறார்கள். சரியான திட்டமிடல் நீர் மேலாண்மையை ஆதாரமாக கொண்டு நம் தஞ்சை, திருச்சி, புதுகை , ராம்நாதபுரம் வரை பன்னிரண்டு மாதங்கள் சுழற்சி முறையில் நீர் ஆதார மேலாண்மை மூலம் நம்மால் விவசாயம் செய்யமுடியும். ஆனால் கொள்ளை அடிப்பதில் திராவிட கட்சிகள் திட்டமிடல் நம்பர் ஒன்னாக இருக்கிறது. காவேரி தண்ணீர் ரயும் கர்நாடகத்தயும் நாம் சார்ந்திராமல் தஞ்சை டெல்டாவை உலகின் நம்பர் ஒன் விவசாய உற்பத்தி திறனில் பஞ்சாபுக்கு நிகராக நாம் கொண்டு வர முடியும். ஆனால் திமுக வாக இருக்கட்டும், அதிமுகவாக இருக்கட்டும் பிரச்சினைகளை தீர்த்தாள் அரசியல் பண்ண முடியாது என இலவசம் மற்றும் மது மயக்கத்திலும் மக்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளனர். மேட்டெருக்கு வருவோம். விவசாயி ஸ்டாலினுக்கு கேள்வி, பதநீர் பசு மாட்டிலிருந்து கிடைக்கிறதா, காளைமாட்டிலிருந்து கிடைக்கிறதா?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
24-டிச-202006:27:57 IST Report Abuse
Girija இப்படிக்கு வயலில் ரோடு போட்டு நடந்த விவசாயி
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
24-டிச-202004:18:15 IST Report Abuse
blocked user விவசாயத்தை காக்க வெறும் பச்சைத்துண்டு போட்டு கட்டாந்தரையில் கான்கிரீட் போட்டு படம் எடுத்தால் முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X