பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் எஸ்.பி.பி.,க்கு சாக்லேட் சிலை

Updated : டிச 23, 2020 | Added : டிச 23, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுச்சேரி: மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுச்சேரியில் 339 கிலோ எடையில் சாக்லெட்டுகளை கொண்டு 5.8 அடி உயரமும், 339 கிலோ எடையும் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியனின் சாக்லெட் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள 'சூகா' என்ற சாக்லெட் ஷாப்பில் ஆண்டுதோறும் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பல்வேறு பிரபலங்களின்
SPB, Chocolate, Statue, Puducherry, எஸ்பிபி, பாலசுப்ரமணியன், சாக்லேட், சிலை, புதுச்சேரி

புதுச்சேரி: மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுச்சேரியில் 339 கிலோ எடையில் சாக்லெட்டுகளை கொண்டு 5.8 அடி உயரமும், 339 கிலோ எடையும் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியனின் சாக்லெட் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள 'சூகா' என்ற சாக்லெட் ஷாப்பில் ஆண்டுதோறும் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பல்வேறு பிரபலங்களின் உருவங்கள் ஷாப்பிங் சிலையாக வடிவமைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்படும். இந்த ஆண்டு மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 339 கிலோ சாக்லெட்டை கொண்டு 5.8 அடி உயரத்தில் அவரது உருவ சாக்லெட் சிலையை வடிவமைத்துள்ளனர். 161 மணி நேரத்தில் தத்ரூபமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிலை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


latest tamil news


இதற்கு முன்பு ராணுவ வீரர் அபிநந்தன், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ரஜினிகாந்த், கார்ட்டூன் கதாப்பாத்திரம் மிக்கி மவுஸ் உள்ளிட்ட 12 பிரபலங்களின் சிலைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாக்லேட் சிலை வரும் ஜனவரி 10-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என சாக்லேட் சிலையை உருவாக்கிய செப் ராஜேந்திரன் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
24-டிச-202006:41:45 IST Report Abuse
Aanandh இது எஸ்.பி.பி.யா......? பார்த்தால் மறைந்த ஈ.வெ.கி. சம்பத் (ஈ,வி,கே.எஸ். இளங்கோவன் தந்தைக்கு தம்பி மாதிரித்தான் தெரிகிறது. படத்தை எடுத்த கோணங்கள், சிலை கையில் வெட்டுக்கத்தி வைத்திருப்பது போல் தோன்றுகிறது
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
24-டிச-202001:38:42 IST Report Abuse
Vena Suna அப்புறம் அதை சாப்பிட்டுருவீங்களா? இது அடுக்குமா? இது தேவையா?
Rate this:
Cancel
sri - mumbai,இந்தியா
23-டிச-202018:44:22 IST Report Abuse
sri ஆனாலும் அளவுக்கு மீறி சினிமா பைத்தியம் பிடித்து ஆட்டுகிறது தமிழகம் புதுச்சேரி போன்ற இடங்களில். இந்த சாக்கலேட் பொம்மை எஸ் பி பி போல இல்லை என்பது ஒரு பக்கம் . இவர்தான் இதுவரை வந்த பாடகர்களிலேயே சிறந்தவரா? டி எம் எஸ் போன்றவர்களுக்கு , எம் எஸ் வீ போன்ற இசை வல்லுநர்களுக்கு குறைந்த பட்ச மரியாதையோ அங்கீகாரமோ கொடுக்காத இந்த நாட்டில் எஸ் பி பி போன்றவர்களுக்கு மட்டும் என் இவ்வளவு பாரபட்சம்?
Rate this:
J. Vensuslaus - Nagercoil,இந்தியா
23-டிச-202023:51:25 IST Report Abuse
J. VensuslausSPB was world's best singer....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X