அமெரிக்காவில் ஒவ்வொரு 33 வினாடிக்கும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு

Updated : டிச 23, 2020 | Added : டிச 23, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த ஒருவாரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது ஒவ்வொரு 33 வினாடிக்கும் ஒருவர் உயிரிழந்து வருகின்றனர்.கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாகவும், அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடாகவும் உள்ள அமெரிக்காவில், நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து
US, Every33Second, LosesOneLife, Covid-19, CoronaVirus, DeadliestWeek, அமெரிக்கா, கொரோனா, உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த ஒருவாரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது ஒவ்வொரு 33 வினாடிக்கும் ஒருவர் உயிரிழந்து வருகின்றனர்.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாகவும், அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடாகவும் உள்ள அமெரிக்காவில், நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கைகள் மூலம் மேற்கொண்ட பகுப்பாய்வில், டிச.,20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இது அதற்கு முந்தைய வாரத்தை விட 6.7 சதவீதம் அதிகமாகும்.


latest tamil news


மேலும், கடந்த வாரத்தில் மட்டும் அமெரிக்காவில் ஒவ்வொரு 33 வினாடிக்கும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழக்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்டு இறுதி விடுமுறை நாட்களில் மக்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியும், கடந்த டிச.,18, 19, 20 தேதிகளில் மட்டும் 32 லட்சம் பேர் விமானங்களில் பயணித்ததாக கூறப்படுகிறது. இதனால், தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
24-டிச-202001:36:57 IST Report Abuse
Vena Suna அங்கே குளிர் அதிகம்..அங்கே இருக்கும் வைரஸின் வீர்யம் அதிகம்....
Rate this:
Cancel
Naduvar - Toronto,கனடா
23-டிச-202022:18:31 IST Report Abuse
Naduvar இந்தியா செகண்ட் வாவ் இல் பாதி காணாமப்போயிடும்...அப்புறம் மோடிக்கு அமெரிக்கா விருது கொடுக்கும்
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
23-டிச-202019:44:47 IST Report Abuse
Tamilan முந்திரிகொட்டைபோல் வீறாப்புக்காக அனைத்தையும் திறந்துவிட்டதுதான் காரணம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X