பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் ஜன.,2 வரை இரவு நேர ஊரடங்கு

Updated : டிச 23, 2020 | Added : டிச 23, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
பெங்களூரு: பிரிட்டனில், பரவும் புதுவகையான கொரோனா வைரசை கருத்தில் கொண்டு, கர்நாடகாவில்நாளை (24ம் தேதி) முதல் ஜன.,2 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.கொரோனா பரவல் காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் கர்நாடகாவில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடியூரப்பா கூறுகையில், பிரிட்டனில்
karnataka, curfew,  கர்நாடகா, ஊரடங்கு

பெங்களூரு: பிரிட்டனில், பரவும் புதுவகையான கொரோனா வைரசை கருத்தில் கொண்டு, கர்நாடகாவில்நாளை (24ம் தேதி) முதல் ஜன.,2 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் கர்நாடகாவில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடியூரப்பா கூறுகையில், பிரிட்டனில் பரவி வரும் புதுவகையான கொரோனா வைரசை கருத்தில் கொண்டு, நாளை(டிச.,24) முதல் ஜன.,2 வரை இரவு 11 மணி முதல் காலை5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார். புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டு கொண்டார்.


latest tamil news



சுகாதார அமைச்சர் சுதாகர் கூறுகையில், பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரசை , மாநிலத்தில் பரவாமல் தடுக்கவே ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மக்கள் மாநிலத்திற்குள் பயணம் செய்ய தடையில்லை. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன., 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனக்கூறினார்.

கொரோனா பரவல் காரணமாக, மஹாராஷ்டிராவிலும் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vinoth - Hyderabad,இந்தியா
23-டிச-202022:48:04 IST Report Abuse
Vinoth இரவு பதினோரு மணிமுதல் அதிகாலை ஐந்து மணிவரை கொரோனாவின் டூட்டி டயம், மீதி நேரங்களில் கொரோன தூங்கி ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும்.
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
23-டிச-202021:27:59 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy சிறுபான்மையினருக்கு எதிரான முடிவு என கன்னட சுடலைகள் கூப்பாடு போடப்போகிறது
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
23-டிச-202019:45:35 IST Report Abuse
NicoleThomson முழுநேர அடைப்பு வேண்டும்?
Rate this:
Ramesh Sargam - Bangalore,இந்தியா
23-டிச-202020:45:15 IST Report Abuse
Ramesh Sargamஅதுவும் முழு வீச்சில். மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X