பொது செய்தி

இந்தியா

புதிய பார்லி., கட்டடம்; அதிருப்தி தெரிவித்து முன்னாள் அதிகாரிகள் கடிதம்

Updated : டிச 23, 2020 | Added : டிச 23, 2020 | கருத்துகள் (106)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியி புதிய பார்லி கட்டடம் கட்டும் திட்டம் குறித்து அதிருப்தி தெரிவித்து 69 ஓய்வுப்பெற்ற அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.டில்லியில் தற்போதுள்ள பார்லிமென்டில் போதிய இடவசதி இல்லாததால் அதன் அருகிலேயே ரூ.971 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த 10ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ExBureaucrats, NewParliament, Unnecessary, PM, CentralVista, Project

புதுடில்லி: டில்லியி புதிய பார்லி கட்டடம் கட்டும் திட்டம் குறித்து அதிருப்தி தெரிவித்து 69 ஓய்வுப்பெற்ற அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

டில்லியில் தற்போதுள்ள பார்லிமென்டில் போதிய இடவசதி இல்லாததால் அதன் அருகிலேயே ரூ.971 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த 10ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 'சென்ட்ரல் விஸ்டா' என்ற அழைக்கப்படும் இத்திட்டத்திற்கு அதிருப்தி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 69 பேர் கடிதம் எழுதியுள்ளனர். அரசியல் சாசன நடத்தை குழு என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், 69 பேரும் கையெழுத்திட்டுள்ளனர்.


latest tamil news


கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு கடினமான பொருளாதார சூழலில் இருக்கும்போது, கொரோனா தொற்றால் லட்சக்கணக்கானோர் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கும்போது, பகட்டு காட்டும் ஒரு திட்டத்துக்கு அரசு இவ்வளவு பெரும் தொகையை செலவிடுவது ஏன்? புதிய பார்லி, துணை ஜனாதிபதி இல்லம், பிரதமர் இல்லம் கட்டுவதில் பிடிவாதம் பிடிப்பது அதிகாரத்தின் ஆணவத்தை காட்டுவதாக உள்ளது. இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட விதமும் கவலையை ஏற்படுத்துகிறது.

மேலும், பார்லி., கட்டடத்துக்கு முறைப்படி ஜனாதிபதி தான் அடிக்கல் நாட்டியிருக்க வேண்டும். தவிர, இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது அடிக்கல் நாட்டப்பட்டது நீதிமன்றத்தை மீறிய செயல். இவ்வாறு பிரதமருக்கு கடிதம் எழுதி 69 அதிகாரிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hindustani - Sugar land,TX,யூ.எஸ்.ஏ
24-டிச-202022:22:46 IST Report Abuse
Hindustani KhanGross iruntha kasukku 69 than kullaikka kidaithu irrukku
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
24-டிச-202018:05:11 IST Report Abuse
கல்யாணராமன் சு. இந்த 69 அதிகாரிகளை யார் என்று கண்டறிவது ........ அவர்கள் எந்தெந்த துறையில் எப்போது வேலை செய்தார்கள்
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
24-டிச-202017:29:50 IST Report Abuse
Hari அரசின் கொள்கைகளுக்கு எதிராக கருது சொல்லும் முன்னாள் இந்நாள் அரசு ஊழியர்களின் சொத்துக்களையும் பணிக்கொடை,மற்றும் பென்ஷன் அனைத்தையும் .நிறுத்தணும் இப்போ சொல்லும் யோக்யவான்கல் தங்கள் பனிக்காலத்தில் அரசு கொண்டுவந்த திட்டத்தில் எந்த கொள்கையை எதிர்த்தார்கள் என தெரிவிக்கவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X