ரூ.6,380 கோடி மக்கள் பணம் மோசடி: அக்ரி கோல்ட் நிறுவனத்தார் கைது

Updated : டிச 23, 2020 | Added : டிச 23, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து முறைகேடாக மக்களிடமிருந்து ரூ.6,380 கோடி அளவிற்கு முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்ட அக்ரி கோல்ட் குழும நிறுவனங்களின் அதிபர்கள் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டனர்.இந்த மோசடியில் அவ்வா வெங்கட ராமராவ், அவ்வா வெங்கட சேசு நாராயண ராவ், அவ்வா ஹேம சுந்தர வர பிரசாத் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் பணம், மோசடி, அக்ரி கோல்ட், நிறுவனத்தார், கைது, அமலாக்கத்துறை

புதுடில்லி: கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து முறைகேடாக மக்களிடமிருந்து ரூ.6,380 கோடி அளவிற்கு முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்ட அக்ரி கோல்ட் குழும நிறுவனங்களின் அதிபர்கள் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டனர்.

இந்த மோசடியில் அவ்வா வெங்கட ராமராவ், அவ்வா வெங்கட சேசு நாராயண ராவ், அவ்வா ஹேம சுந்தர வர பிரசாத் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இன்று (டிச., 23) ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அக்ரி கோல்ட் குழும நிறுவனங்கள் என்ற பெயரில் இந்த மோசடியை அவ்வா வெங்கட ராமராவ் செய்துள்ளார். இவர் இதற்கு முன்பு கோல்டன் பாரஸ்ட் சிஐஎஸ் என்ற மோசடி திட்டத்தில் பணியாற்றியுள்ளார். அங்கு கற்ற அனுபவத்தைக் கொண்டு நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தை மேற்கொண்டதாக அமலாக்கத் துறை கூறுகிறது. அவ்வா வெங்கட ராமராவும், அவரது ஏழு சகோதரர்கள் மற்றும் பிற கூட்டாளிகளுடன் சேர்ந்து 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அமைத்துள்ளார். அந்நிறுவனங்கள் மூலம் பொது மக்களிடமிருந்து வைப்புத் தொகையை சேகரித்துள்ளனர்.


latest tamil news




முதலீடு செய்யப்படும் பணத்தை வீட்டு மனைகள், விவசாய நிலங்களாக பெறலாம் அல்லது அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும் என ஆசை காட்டியுள்ளனர். இதனை நம்பி பலரும் முதலீடு செய்திருக்கிறார்கள். அதிக கமிஷன் தந்து ஆயிரக்கணக்கான ஏஜென்ட்களை நியமித்து பணத்தை கறந்துள்ளனர். 32 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.6,380 கோடி வசூலித்திருப்பதாக அமலாக்கத்துறை கூறுகிறது.

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், அந்தமான் மற்றும் நிக்கோபார் என நாடு முழுவதும் இவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிறுவனங்கள் நிலத்தின் உண்மையான சந்தை மதிப்பு, அமைவிடம், சர்வே எண் போன்ற எதையும் குறிப்பிடவில்லை. அப்படி இருந்தும் பலரும் நம்பி பணம் போட்டுள்ளார்கள். 32 லட்சம் பேரிடம் பணம் பெற்ற இவர்களிடம், 5.5 லட்சம் நிலங்கள் மட்டுமே உள்ளன. அவையும் சரிபார்க்கப்படாத நிலங்கள் என அமலாக்கத்துறை தெரிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mariyappangopinathan - Chennai,இந்தியா
24-டிச-202010:07:49 IST Report Abuse
mariyappangopinathan நம்ம தமிழ் நாட்டிலும் இப்படி நெறய இருக்கு. தங்கம் விக்கணுமா எங்க கிட்ட வாங்க ஒரே நிமிஷத்துல பணமா குடுத்துடுவாங்கன்னு பல கம்பெனிகள் போட்டி போட்டு விளம்பரம் செய்யுறாங்க. அதுக்கு துணையா நடிகைகளும் ஜால்றா போடுறாங்க. எப்ப இவங்க எல்லாம் மாட்டுவாங்களோ. அது வரைக்கும் அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பண மழைதான்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
24-டிச-202009:21:36 IST Report Abuse
VENKATASUBRAMANIAN ஆப்பு ஒரு திட்டத்தை அரசு கொண்டு வருகிறது. அதை அதிகாரிகள் எப்படி செய்கிறார்கள் என்பதை பொறுத்து அதன் வெளிப்பாடு தெரியும். ஆனால் ஒரு திட்டம் வந்தாலே எப்படி திருடலாம் என்று நினைக்கும் அதிகாரிகள் இருக்கும் வரை எதுவும் வெற்றி பெறுவது கடினம். அன்றே பாடியுள்ளார்கள். திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
Rate this:
Cancel
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
24-டிச-202008:39:16 IST Report Abuse
Sukumar Talpady அவ்வா எல்லோருக்கும் அல்வா கொடுத்து விட்டார்கள் போலிருக்கிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X