அறிவியல் ஆயிரம்
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உடை
ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற வகையில் தான் உடையின் தன்மை இருக்க வேண்டும். இந்தியாவின் எல்லா பருவநிலைகளுக்கும் ஏற்ற உடை யாக கதர் ஆடை உள்ளது. உற்பத்தி முதல் நுகர்வு வரை கதர் ஆடையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் அம்சங்கள் எதுவுமே இல்லை. மேலும் கதர் அணிபவர்களுக்கு தோல் அலர்ஜி ஏற்படுவது இல்லை. பயன்படுத்திய பின் கதர் துணியை மண்ணில் விட்டாலும் எளிதில் மட்கிவிடும். பாலிஸ்டர், டெர்லின் போன்றவை எளிதில் மட்காது. கதர் துணி உற்பத்தியில் குறைந்த அளவில் மட்டுமே ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.
தகவல் சுரங்கம்
நுகர்வோர் தினம்
நுகர்வோர் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த டிச., 24ல் தேசிய நுகர்வோர் தினம் கடைப் பிடிக்கப்படுகிறது. உலகில் அனைவருமே ஒரு விதத்தில் நுகர்வோர் தான். நுகர்வோரை வைத்து தான் வியாபார சந்தையே நடக்கிறது. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஏமாறுவது தடுக்கப்படும். பாடப் புத்தகத்தில் நுகர்வோர் உரிமைகள் பற்றிய பாடத்தை சேர்க்க வேண்டும். குறைபாடுகளை எதிர்த்து போராடினால் தான் தரமான பொருட்கள் சந்தையில் கிடைக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE