9 கோடி விவசாயிகளுடன் மோடி நாளை உரை: வேளாண் சட்டங்கள் குறித்து தெளிவுபடுத்துவார்

Updated : டிச 24, 2020 | Added : டிச 23, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
புது டில்லி: புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் ஒரு மாதத்தை நெருங்கி வரும் நிலையில், டிச., 25-ம் தேதி வாஜ்பாய் பிறந்த நாளன்று 9 கோடி விவசாயிகளுடன் பிரதமர் உரையாற்ற உள்ளார்.மத்திய அரசு செப்டம்பர் மாதம் புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இச்சட்டத்திற்கு வட மாநிலங்கள் சிலவற்றில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 28-வது நாளாக இன்று (டிச., 23) வரை போராட்டம்
PM Modi, interact, farmers, 6 states, PM_KISAN

புது டில்லி: புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் ஒரு மாதத்தை நெருங்கி வரும் நிலையில், டிச., 25-ம் தேதி வாஜ்பாய் பிறந்த நாளன்று 9 கோடி விவசாயிகளுடன் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
மத்திய அரசு செப்டம்பர் மாதம் புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இச்சட்டத்திற்கு வட மாநிலங்கள் சிலவற்றில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 28-வது நாளாக இன்று (டிச., 23) வரை போராட்டம் தொடருகிறது. புதிய வேளாண் சட்டங்கள் கார்ப்ரேட்டுகளுக்கே சாதகமாக அமையும் என விவசாயிகள் கூறுகிறார்கள். ஆனால் இச்சட்டங்களால் விளை பொருட்களை விவசாயிகள் விரும்பிய விலைக்கு விற்க முடியும் என மத்திய அரசு கூறுகிறது.

விவசாயிகளுடனான பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. முழு சட்டத்தையும் திரும்ப பெற விவசாய சங்கங்கள் கோருகின்றன. சிலவற்றை திருத்துவதற்கு மட்டுமே மத்திய அரசு தயாராக உள்ளது. விவசாயிகள் போராட்டத்தை சமாளிக்க 100 பத்திரிகையாளர் சந்திப்புகள் மற்றும் 700 கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளான டிச., 25 அன்று மோடி விவசாயிகளிடையே உரையாற்றுகிறார்.


latest tamil news



மெய்நிகர் முறையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 9 கோடி விவசாயிகள் பங்கேற்பார்கள் என பிரதமர் அலுவலகம் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவார். அவர்கள் தங்கள் நலனுக்காக மத்திய அரசு முன்னெடுத்த திட்டங்களை பற்றி பகிர்ந்துகொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது. அப்போது விவசாயிகளுக்கான அடுத்த கட்ட நிதியுதவிக்காக ரூ.18,000 கோடி விடுவிப்பார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
24-டிச-202009:12:52 IST Report Abuse
Allah Daniel 9 கோடி என்றதும், ஹிந்தி தெரியாத தியமுக கொத்தடிமைகள், வெட்கமே இல்லாம 'பேங்க்ல எப்ப காசு போடுவீங்கன்னு' சட்டியை தூக்கிட்டு வரப்போறாங்க...
Rate this:
24-டிச-202010:04:21 IST Report Abuse
தமிழ் ஆமா இங்கே இருக்கிற ஒண்ணு ரெண்டு பக்கோடாஸ்க்குமட்டும் ஹிந்த் தெரியுமாக்கும்....
Rate this:
Cancel
Nepolian s -  ( Posted via: Dinamalar Android App )
24-டிச-202008:20:30 IST Report Abuse
Nepolian s யோவ் டுபாக்கூர்... போதும் யா வடை
Rate this:
Cancel
P Sundaramurthy - Chennai,இந்தியா
24-டிச-202008:19:08 IST Report Abuse
P Sundaramurthy சரியா எண்ணின்களா, ஒம்பது கோடிக்கு ஒன்னு குறைஞ்சாலும் பேசமாட்டேன், அம்புட்டுதான் சொல்லிப்புட்டேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X