சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

சீர்திருத்த அரசியல் வேண்டுமா?

Added : டிச 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சீர்திருத்த அரசியல் வேண்டுமா?அ.யாழினி பர்வதம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில், ஆந்திராவில் இருந்து, சென்னை கோயம்பேடுக்கு, தக்காளி ஏற்றி வந்த லாரி, செங்கல்பட்டு அருகே, அதிகாலை பனி மூட்டத்தில் தடுமாறி, மீடியனில் மோதி கவிழ்ந்தது.விபத்து நிகழ்ந்ததும், அக்கம் பக்கம் உள்ளோர் மனிதாபிமானத்தோடு, காயம் அடைந்தோரை காப்பாற்றி, சம்பந்தப்பட்டோருக்கு நஷ்டம் ஏற்படாமல்

சீர்திருத்த அரசியல் வேண்டுமா?

அ.யாழினி பர்வதம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில், ஆந்திராவில் இருந்து, சென்னை கோயம்பேடுக்கு, தக்காளி ஏற்றி வந்த லாரி, செங்கல்பட்டு அருகே, அதிகாலை பனி மூட்டத்தில் தடுமாறி, மீடியனில் மோதி கவிழ்ந்தது.விபத்து நிகழ்ந்ததும், அக்கம் பக்கம் உள்ளோர் மனிதாபிமானத்தோடு, காயம் அடைந்தோரை காப்பாற்றி, சம்பந்தப்பட்டோருக்கு நஷ்டம் ஏற்படாமல் ஆதரவளிப்பது தான், இதுவரை நம் இனத்திற்கு பெருமை சேர்த்து வந்த தமிழ் பண்பாடாகும்.ஆனால், செங்கல்பட்டு அருகே நடந்த இந்த விபத்தின் போது, நிகழ்ந்தது என்ன தெரியுமா...விபத்து செய்தியறிந்து திரண்டு வந்த பொதுமக்கள், கவிழ்ந்து கிடந்த லாரியில் இருந்து சிதறிய தக்காளிகளை திருடிச் சென்றனர். அது மட்டுமல்ல, லாரியிலிருந்த டீசலைக் கூட, 'கேன்'களில்
பிடித்துச் சென்றனர்.விபத்தில் காயமடைந்த ஓட்டுனர் குறித்தோ, போக்குவரத்து பாதித்தது பற்றியோ, அந்த மக்கள் கவலைப்படாதது, வேதனை அளித்தது.இது, ஒரு சோறு பருக்கை உதாரணம். இது போல எண்ணற்ற சம்பவங்கள் நடந்துள்ளன.இந்த மக்கள் தான், 2021 பொதுத் தேர்தலில், நல்லாட்சி ஏற்பட ஓட்டளிக்கப் போகின்றனராக்கும்!மக்கள், இந்த லட்சணத்தில் இருந்தால், ஆட்சியாளர்கள், லஞ்சம் - ஊழலில் திளைத்து சொத்து குவிக்கத் தான் செய்வர்.அவர்களை தட்டிக் கேட்கும் தகுதி, இந்த மக்களுக்கு இருக்கிறதா? இவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர் மட்டும், யோக்கியனாக இருப்பார் என,
எப்படி எதிர்பார்க்க முடியும்?முட்டாள்கள் வாழும் நாட்டில், ஆளத் தெரியாதவர் தான் ஆட்சி நடத்துவர் என்பது, சரியாகத் தான் இருக்கிறது.முதலில் மக்கள் திருந்தினால் தான், சீர்திருத்த அரசியலையும், சிறந்த தலைமையையும் ஏற்படுத்த முடியும்.


சோனியாவின் கணக்கு!எம்.சீனிவாசன், கவரைப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: காங்., தலைவராக இருந்த ராகுல், லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் இதுவரை, காங்., தலைவர் பதவி நிரப்பப்படவில்லை.ராகுலின் தாய் சோனியாவே, காங்கிரஸ் தற்காலிக தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.பல மாநிலங்களில், தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதால், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குள் பிளவு ஏற்படத் துவங்கியுள்ளது. காங்கிரஸ் தலைவர் தான், அந்த கூட்டணியின் தலைவராகவும் இருப்பது வழக்கம்.
ஆனால், தற்போது கூட்டணிக்கு தலைவராக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை நியமிக்க வேண்டும் என, குரல் எழுந்துள்ளது. இதை, காங்கிரஸ் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது.கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், பிரதமர் பதவி, சோனியாவை தேடி வந்த போது, அதை எதிர்த்தவர் சரத்பவார். அந்த கோபம், சோனியாவிற்குள் இன்றும் நீறு பூத்த நெருப்பாக இருக்கும். அதனால் சரத் பவார், கூட்டணிக்கு தலைவராவதை, சோனியா ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராக, தன் மகன் ராகுல் வர வேண்டும் என்று தான், சோனியா கணக்கு போடுவார்.அதற்கு முதலில், காங்கிரஸ் தலைவர் யார் என்பதை, அக்கட்சி முடிவு செய்ய வேண்டும்.


இதில் நியாயம் இல்லை!நா.மு.நாச்சியப்பன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இந்த ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை.அரசு பள்ளிக்கும், அரசு உதவி பெறும் பள்ளிக்கும் இடையே, பெரிய அளவில் வேறுபாடு கிடையாது.தனியார் மெட்ரிக் பள்ளியில் படிக்கும், வசதியானோரின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் இருப்பதை ஏற்றுக் கொள்ளலாம்.சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியோர், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர். எனவே, அந்த மாணவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி இருக்க வேண்டும்.மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு கொடுத்ததில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களைப் புறக்கணித்தது, எந்த வகையிலும் நியாயம் இல்லை.

சி.பி.ஐ-.,க்கு அக்னிப் பரிட்சை!

க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: எல்லாவற்றையும் விசாரிக்கும், சி.பி.ஐ., அமைப்பில் நடந்த மோசடியை, யார் விசாரிப்பது?கடந்த, 2012ல், சட்ட விரோதமாகத் தங்கம் இறக்குமதி செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, சென்னையில் உள்ள, 'சுரானா' நிறுவனத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அதில், 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, சுரானா நிறுவனத்தின் மீதும், அந்த நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும், சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது.பறிமுதல் செய்யப்பட்ட, 400 கிலோ தங்கம், சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கரில், 'சீல்' வைக்கப்பட்டது.அந்த லாக்கரின், 72 சாவிகளும், 400 கிலோ தங்கம் பறிமுதல் செய்ததாகத் தயாரிக்கப்பட்ட பட்டியல் ஆவணமும், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்த போது, 104 கிலோ தங்கத்தை காணவில்லை.இது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், 'ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவுக்கு, மோசடி நடந்துள்ளது. 104 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது, சி.பி.ஐ., மீது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது' எனக் கூறியுள்ளார்.இந்த மோசடியால், சி.பி.ஐ., மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், இந்த மோசடி குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க வேண்டும், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, சி.பி.ஐ.,க்கு நேர்ந்த அவமானம்.சி.பி.ஐ., அதிகாரிகளும், விசாரணை களத்தில் இறங்கி, தங்களின் பரிசுத்தத்தை நிரூபிக்க வேண்டும். இது, சி.பி.ஐ-.,க்கு அக்னிப் பரிட்சை என்பதில், மாற்றுக் கருத்தில்லை.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
24-டிச-202018:55:31 IST Report Abuse
Anantharaman Srinivasan சி.பி.ஐ.,க்கு நேர்ந்த அவமானம். என வாசகர் வருத்தம்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-டிச-202006:32:24 IST Report Abuse
D.Ambujavalli இது பத சோறுதான் வெளி வந்ததால் சி பி ஐ லட்சணம் உலகுக்கு தெரிகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X