பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : டிச 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
டிச., 24, 1987இலங்கையில், கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில், 1917 ஜன., 17ல் பிறந்தவர், எம்.ஜி.ஆர்., என்ற மருதுார் கோபாலன் மேனன் ராமச்சந்திரன்.தந்தையின் மறைவு காரணமாக, அவரது குடும்பம், கும்பகோணத்தில் குடியேறியது. வறுமையால் படிப்பைத் தொடர முடியாமல், நாடகங்களில் நடிக்கத் துவங்கினார்.காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, காங்கிரசில் இணைந்தார். 1936ல்,

இதே நாளில் அன்று


டிச., 24, 1987



இலங்கையில், கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில், 1917 ஜன., 17ல் பிறந்தவர், எம்.ஜி.ஆர்., என்ற மருதுார் கோபாலன் மேனன் ராமச்சந்திரன்.தந்தையின் மறைவு காரணமாக, அவரது குடும்பம், கும்பகோணத்தில் குடியேறியது. வறுமையால் படிப்பைத் தொடர முடியாமல், நாடகங்களில் நடிக்கத் துவங்கினார்.காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, காங்கிரசில் இணைந்தார். 1936ல், சதிலீலாவதி படத்தின் மூலம், சினிமா நடிகராக மாறினார். சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார்.
தி.மு.க.,வில் இணைந்து, அக்கட்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின், அ.தி.மு.க.,வை துவக்கி, மக்களின் பெரும் ஆதரவை பெற்றார். 1977 முதல், தொடர்ந்து மூன்று முறை, முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 'பாரத ரத்னா' உட்பட, ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். 1987 டிச., 24ம் தேதி, தன், 70வது வயதில் இயற்கை எய்தினார்.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manicka Vasagam - Panagudi,இந்தியா
24-டிச-202017:03:31 IST Report Abuse
Manicka Vasagam கிரேட் லீடர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X