கூட்டுறவு சங்க ஊழல் வழக்கு மத்திய அமைச்சருக்கு 'நோட்டீஸ்'

Added : டிச 23, 2020
Share
Advertisement
ஜோத்பூர்:கூட்டுறவு சங்க மோசடி வழக்கில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உட்பட, 17 பேருக்கு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்,'நோட்டீஸ்' அனுப்பியது.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது.இங்கு, சஞ்சீவனி கூட்டுறவு சங்கத்தில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அவரது மனைவி உள்ளிட்ட, 17 பேர் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள்

ஜோத்பூர்:கூட்டுறவு சங்க மோசடி வழக்கில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உட்பட, 17 பேருக்கு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்,'நோட்டீஸ்' அனுப்பியது.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது.இங்கு, சஞ்சீவனி கூட்டுறவு சங்கத்தில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அவரது மனைவி உள்ளிட்ட, 17 பேர் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.அவர்கள், 900 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர்களுக்கு எதிராக, சஞ்சீவனி கூட்டுறவு சங்கத்தில், முதலீடு செய்தோர் சங்கம் சார்பில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில், 'முதலீடுகளை மீட்டு, பணத்தை பறிகொடுத்தோருக்கு நீதி வழங்க வேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இந்த மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற நீதிபதி விஜய் விஷ்னோய் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மதுசூதன் புரோஹித் கூறியதாவது:கூட்டுறவு தலைவர் விக்ரம் சிங், முன்னாள் உறுப்பினர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோர், போலி ஆவணங்களை காண்பித்து, முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டனர்.இந்த வழக்கை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு முகமைகள் விசாரிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு, வட்டியுடன் சேர்த்து அசல் தொகையையும் திரும்ப வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதையடுத்து, இந்த மனு குறித்து பதிலளிக்கக் கோரி, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உட்பட, குற்றஞ்சாட்டப்பட்ட, 17 பேருக்கும், நீதிபதி விஜய் விஷ்னோய், நோட்டீஸ் பிறப்பித்தார். பின், இந்த வழக்கு விசாரணை, வரும் ஜனவரி, 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X