'விருப்பத்துடன் மணம் முடித்து மதம் மாறினால் தலையிடக்கூடாது'

Added : டிச 23, 2020
Share
Advertisement
கோல்கட்டா:'பெண்கள், முழு விருப்பத்துடன், தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து, மதம் மாற விரும்பினால், அதில் யாரும் தலையிட முடியாது' என, கோல்கட்டா உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.இங்கு, 19 வயதான இளம்பெண் ஒருவர், வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம்

கோல்கட்டா:'பெண்கள், முழு விருப்பத்துடன், தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து, மதம் மாற விரும்பினால், அதில் யாரும் தலையிட முடியாது' என, கோல்கட்டா உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.இங்கு, 19 வயதான இளம்பெண் ஒருவர், வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார்.


வழக்குப்பதிவு



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பெண்ணின் தந்தை, வழக்குப்பதிவு செய்தார். தன் மகள், வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளப்பட்டதாக, அவர் புகார் அளித்தார்.இதையடுத்து, நாடியாவில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி, வாக்குமூலம் அளிக்க, அந்த பெண்ணுக்கு, கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி ஆஜரான அப்பெண், தன் முழு விருப்பத்துடனேயே திருமணம் நடந்ததாக கூறினார். இந்நிலையில், வாக்கு மூலம் அளித்த தன் மகளுடன், அவரது கணவரும் இருந்ததால், அவரால் எதையும் தைரியமாக சொல்ல இயலவில்லை என, அப்பெண்ணின் தந்தை புகார் அளித்தார். இது தொடர்பான மனுவை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும்ஹரிஜித் பானர்ஜி அடங்கிய அமர்வு,விசாரித்தது.

அப்போது, பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:முழு விருப்பத்துடன், 18 வயதை கடந்தோர், தனக்கு பிடித்தவரை மணம் முடித்து, மதம் மாற விரும்பினால், அதில், யாரும் தலையிட முடியாது.


வாக்குமூலம்



பெண்ணின் வாக்கு மூலத்தைப் பெற்ற கூடுதல் மாவட்ட நீதிபதி, தெளிவான அறிக்கையை சமர்ப்பித்த பின்பும், அப்பெண்ணின் தந்தைக்கு சந்தேகம் உள்ளது.எனவே, கூடுதல் அரசு வழக்கறிஞர் சைபல் பாபுலி முன், அந்த பெண் மீண்டும் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும். அப்போது, அவரது கணவர் உட்பட யாரும் உடன் இருக்கக்கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X