பொது செய்தி

இந்தியா

கிழக்கு லடாக் பகுதியில் நரவானே நேரில் ஆய்வு

Added : டிச 23, 2020
Share
Advertisement
புதுடில்லி:கிழக்கு லடாக்கின் மலை சிகரங்களில் அமைந்துள்ள, நம் ராணுவத்தினரின் முக்கிய நிலைகளை, ராணுவ தலைமை தளபதி, ஜெனரல் எம்.எம்.நரவானே, நேரில் ஆய்வு செய்தார்.கிழக்கு லடாக் எல்லையில், இந்தியா -- சீனா இடையே, கடந்த எட்டு மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாட்டு ராணுவமும், தலா, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை, எல்லையில் குவித்துள்ளன.வாய்ப்புராணுவ கமாண்டர்கள்

புதுடில்லி:கிழக்கு லடாக்கின் மலை சிகரங்களில் அமைந்துள்ள, நம் ராணுவத்தினரின் முக்கிய நிலைகளை, ராணுவ தலைமை தளபதி, ஜெனரல் எம்.எம்.நரவானே, நேரில் ஆய்வு செய்தார்.

கிழக்கு லடாக் எல்லையில், இந்தியா -- சீனா இடையே, கடந்த எட்டு மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாட்டு ராணுவமும், தலா, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை, எல்லையில் குவித்துள்ளன.வாய்ப்புராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான, எட்டு சுற்று பேச்சு நடைபெற்ற நிலையில், இன்னும் சுமுக தீர்வு எட்டப்படவில்லை.

துாதரக அதிகாரிகள்அளவில், கடந்த வாரம் நடந்த பேச்சில், உண்மையான எல்லை கட்டுப்பாடு பகுதிகளில், மோதல் வெடிக்க வாய்ப்புள்ள நிலைகளில், படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை மேற்கொள்ள, இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. இந்நிலையில், ராணுவ தலைமை தளபதி, ஜெனரல் எம்.எம்.நரவானே, கிழக்கு லடாக் பகுதிக்கு நேற்று காலை சென்றார். அங்கு தற்போது நிலவும் கடும் குளிர் மற்றும் கள நிலவரத்தை பார்வையிட்டார்.


விளக்கம்

மலை சிகரத்தில் அமைந்துள்ள பல முக்கிய நிலைகளுக்கு சென்று, வீரர்களின் தயார் நிலையை ஆய்வு செய்தார். லே பகுதியின், 14வது படைப்பிரிவின் கமாண்டர், லெப்டினன்ட் ஜெனரல், பி.ஜி.கே.மேனன், நரவானே உடன் சென்று, கள நிலவரங்களை விரிவாக விளக்கினார்.ஜீரோ டிகிரி குளிரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களை, நரவானே பாராட்டி ஊக்கப் படுத்தினார். கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X