சபரிமலையில் மோசடி ஏமாந்த பக்தர்கள்

Added : டிச 23, 2020
Share
Advertisement
மூணாறு:சபரிமலையில் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி பக்தர்களிடம் பணமோசடி நடக்கிறது.சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 'ஆன்லைன்' முன் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் செல்கின்றனர்.ஏராளமானோருக்கு தரிசன அனுமதி கிடைப்பதில்லை.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புதுச்சேரியைச் சேர்ந்த கவிதாஸ் உட்பட

மூணாறு:சபரிமலையில் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி பக்தர்களிடம் பணமோசடி நடக்கிறது.
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 'ஆன்லைன்' முன் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் செல்கின்றனர்.ஏராளமானோருக்கு தரிசன அனுமதி கிடைப்பதில்லை.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புதுச்சேரியைச் சேர்ந்த கவிதாஸ் உட்பட ஐந்து பக்தர்களிடம், ஒருவர் பண மோசடி செய்துள்ளார்.

'டிராவல்ஸ் ஏஜென்ட்' ஒருவர் மூலம் நிலக்கல்லில் அறிமுகமான அந்த நபர், சபரிமலை தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி, ஐந்து பேரிடமும் தலா, 9,000 ரூபாய் கேட்டார். பக்தர்களும், முன்பணமாக வங்கி கணக்கில், 5,000 ரூபாய் செலுத்தினர்.குமுளியில் வைத்து அனுமதி சீட்டு தருவதாக கூறிய அந்த நபர், பின் அவர்களை நிலக்கல்லுக்கு வரும்படி கூறியுள்ளார்.

அங்கு சென்றவர்கள் அந்த நபரை அலைபேசியில் தொடர்பு கொண்டபோது, போன், 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.பணம் இழந்ததை உணர்ந்ததால், அவர்கள் கோவிலுக்கு செல்லாமல் ஊர் திரும்பினர். இப்படி ஒரு கும்பல், சபரிமலைக்கு வரும் பக்தர்களிடம் மோசடி செய்கிறது. போலீசார், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X