புதுடில்லி: 'தங்களுக்கு எதிரான, 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை தொடர்பான வழக்கில், துணை மனுக்களை தாக்கல் செய்து, பா.ஜ.,வைச் சேர்ந்த, சுப்பிரமணியன் சாமி வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்கிறார்' என, காங்., தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் தரப்பில் வாதிடப்பட்டது.
காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வாங்கிய, 90 கோடி ரூபாய் கடனை செலுத்த முடியாத நிலையில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை இருந்தது.
![]()
|
வந்தது.
அப்போது, சோனியா, ராகுல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டதாவது:கூடுதல் ஆவணங்களை சாட்சியங்களாக கோரி மனு தாக்கல் செய்ய, சுப்பிரமணியன் சாமிக்கு உரிமை உள்ளது. ஆனால், சரியான சட்ட விதிகளின்படி, இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை. அவர், மேம்போக்காக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
முக்கிய வழக்கை இழுத்தடிப்பு செய்வதற்காக, அவர் இவ்வாறு துணை மனுக்களை தொடர்ந்து தாக்கல் செய்து வருகிறார். வேண்டுமென்றே அவர் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறார். அதனால், அவருடைய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் வாதிட்டார். வழக்கின் விசாரணை, ஜன., 12க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE